தொடர்ந்தும் சீனாவிடம் கடன்களை வாங்கிக்குவிக்கும் இலங்கை!
சீனாவின் பெய்ஜிங்கைத் தலைமையகமாகக் கொண்டுள்ள ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியிடம் இருந்து இலங்கை கடன் கோரியுள்ளது.
பசுமை அபிவிருத்தித் திட்டங்களுக்காக இலங்கை 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனைக் கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆசிய உட்கட்டமைப்பு வங்கி, 2016 ஜனவரியில் திறக்கப்பட்டது. இந்த வங்கியின் ஸ்தாபக உறுப்பினர்களில் இலங்கையும் ஒன்றாகும்.
இந்தநிலையில் ஆடை உற்பத்திக்குத் தேவையான பொருட்களை இறக்குமதி செய்யவும் இலங்கை, சீனாவிடம் இருந்து கடன் ஏற்பாட்டையும் கோரியுள்ளது.
ஏற்கனவே சர்வதேச நாணய நிதியத்துடன் கடன் வசதிக்காக செல்வதில்லை என்றும் சீனாவிடம் இருந்து புதுப்பிக்கப்பட்ட கடன்களை பெறவுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


டிசம்பரில் ஜாக்போட்.. 18 மாதங்களுக்கு பின் அதிர்ஷ்டத்தை கொட்டிக் கொடுக்கும் செவ்வாய் பெயர்ச்சி Manithan