சீன நிறுவனத்துடன் இலங்கை முக்கிய ஒப்பந்தம் கைச்சாத்து (Photos)
இலங்கையில் எரிபொருள் விற்பனை செய்வது தொடர்பில் சீனாவின் சினோபெக் நிறுவனத்துடனான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த நிகழ்வு இன்றைய தினம் (22.05.2023) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட விசேட குழுவின் பரிந்துரைகளைத் தொடர்ந்து, இலங்கையில் பெட்ரோலியப் பொருட்களின் இறக்குமதி, சேமிப்பு, விநியோகம் மற்றும் விற்பனை தொடர்பான இந்த நீண்ட கால ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

பேச்சுவார்த்தைகள் முடிவு
சினோபெக் ஃப்யூயல் ஒயில் லங்கா (பிரைவேட்) லிமிடெட் மற்றும் சீனா, சிங்கப்பூரில் உள்ள அதன் தாய் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தைகள் முடிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW |



நேபாளத்தில் மீண்டும் திடீர் வெள்ளப்பெருக்கு: அடித்து செல்லப்பட்ட 35 வீடுகள் மற்றும் பாலங்கள் News Lankasri
13 இராணுவ வீரர்களை சுட்டுக்கொன்றவருக்கு மரண தண்டனை: ஏற்றுக்கொள்ள முடியாதது - போப் லியோ News Lankasri