இலங்கைக்குள் அமெரிக்க பாதுகாப்பு செயலகத்தின் திடீர் தலையீடு - இராணுவ ஆய்வாளர் தகவல் (VIDEO)
இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு சீன ஆய்வு கப்பல் வந்துள்ள நிலையில், கப்பலை கண்காணிக்கும் தீவிர நடவடிக்கையில் அமெரிக்க அரசு உயர் தொழில்நுட்ப கருவிகளை பொருத்தியுள்ளதாக பிரித்தானிய இராணுவ ஆய்வாளர் கலாநிதி. அருஸ் தெரிவித்துள்ளார்.
சீன கப்பல் தொடர்பில் அமெரிக்க தூதுவர் நேரடியாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து தனது எதிர்ப்பினை வெளியிட்டுள்ளார்.
இதனையும் மீறி தற்போது இலங்கை சீன கப்பலை நாட்டிற்குள் அனுமதித்துள்ள நிலையில்,இந்து சமுத்திரத்தில் சீனாவின் கைகள் ஓங்கியுள்ளதினை அவதானிக்க கூடியதாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இது உள்ளிட்ட இன்னும் பல விடயங்களை உள்ளடக்கி வருகிறது ஊடறுப்பு நிகழ்ச்சி,
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 25