இந்தியா தடுத்தாலும் சீனாவால் ஈழத்தமிழர்களிற்கு இது தான் நடக்கும்
இந்தியா தடுத்தாலும் ஈழத்தமிழர்களிற்கு சீனாவால் தீர்வு கிடைக்கும் என கனடாவில் இருக்கக்கூடிய அரசியல் அவதாணி கிருஸ்ணர் தெரிவித்துள்ளார்.
ஈழத்தமிழர்கள் தொடர்பில் நிலவி வரும் கேள்விகள்? அதன் ஐயப்பாடுகள் தொடர்பில் எமது ஊடறுப்பு நிகழ்ச்சிக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
ஆட்சியாளர்களும்,துணை தூதரகங்கள் இருந்துக்கொண்டும் செயற்படாமல் இருந்தவையே தமிழ் மக்கள் தமது இலக்கை அடைவதற்கான வாய்ப்பாக அமைந்தது.
மேலும் மேற்குலகம் ,ட்ரம்பின் ஆட்சியான சமகாலமே தமிழர்களின் பொற்காலமாக அமைந்தது.அந்த பொற்காலத்தில் தான் திரும்பி போகாத அளவில் சீனா இலங்கையில் தனது ஆதிக்கத்தை செலுத்தியது.
மேலும் சீனா இலங்கையில் கால் ஊண்ட ஊண்ட ஈழத்தமிழர்களின் ஆதிக்கம் தமிழீழம் என்ற கருத்தியல் மேலோங்கி கொண்டே செல்லும்.
சீனா முழுமையாக திரும்பி செல்ல முடியாத அளவிற்கு சிங்கள தேசத்தில் வளர்ந்தால் இலங்கையில் தமிழீழம் என்ற கருத்தையோ,தமிழீழம் உருவாகுவதையோ யாராலும் தடுக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.