தைவானை 71 போர் விமானங்களால் சுற்றி வளைத்த சீனா! எல்லையில் அதிகரிக்கும் போர்ப்பதற்றம்
தைவானை சுற்றி வளைத்து சீனா போர்ப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளமையினால் இரு நாடுகளுக்கும் இடையே போர்ப்பதற்றம் அதிகரித்துள்ளது.
தைவானுடனான இராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்தும் சட்டமசோதா ஒன்றில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கடந்த வாரம் கையெழுத்திட்ட நிலையில் அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை தைவான் வரவேற்றுள்ளது.
இந்நிலையில், சீனா அதனை வன்மையாக கண்டித்து மேலும் தைவானை மிரட்டும் விதமாக தைவானை நோக்கி சீனா 39 போர் விமானங்களையும், 3 போர்க்கப்பல்களையும் அனுப்பியதனால் இருநாடுகளின் எல்லையில் மீண்டும் போர் பதற்றம் உருவானது.
இதனை தொடர்ந்து சீனா தைவானை சுற்றி வளைத்து போர்ப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளதுடன், தைவானை சுற்றிய வான் மற்றும் நீர் பரப்பில் கடுமையான போர்ப்பயிற்சி மேற்கொள்ளப்பட்டதாக சீன இராணுவத்தின் கிழக்கு படைப்பிரிவின் தலைவர் கூறியுள்ளார்.
இதற்கிடையில் மீண்டும் நேற்று காலை 6 மணி வரையிலான 24 மணி நேரத்தில் சீனா தைவானை நோக்கி 71 போர் விமானங்களையும், 7 போர்க்கப்பல்களையும் அனுப்பியதாக தைவான் இராணுவ அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 19 மணி நேரம் முன்

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri

மௌன ராகம் படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா?- வருத்தப்பட்ட பிரபலம் Cineulagam
