மற்றுமொரு கப்பல் இலங்கைக் கடற்பரப்பிற்குள் பிரவேசிக்க அனுமதி கோரியுள்ள சீனா
அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் இலங்கைக் கடற்பரப்பிற்குள் பிரவேசிப்பதற்கு தமது கப்பல் ஒன்றுக்கு அனுமதி வழங்குமாறு, சீனா கோரியுள்ளமையை இலங்கையின் வெளியுறவு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
எனினும் இது தொடர்பில் எவ்வித செயற்பாடுகளும் மேற்கொள்ளப்படவில்லை என இலங்கை வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
சீனாவின் வெளிவிவகார அமைச்சிடம் இருந்தே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஷி யான் 6 ஆராய்ச்சிக் கப்பல்
சீனாவின் ஷி யான் 6 என்ற ஆராய்ச்சிக் கப்பல், இலங்கைக்கு வந்து ஒரு மாத காலத்துக்குள்ளாகவே புதிய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவினால் எழுப்பப்பட்ட பாதுகாப்பு கரிசனைகளும் மீறி இலங்கை கடற்பரப்பிற்குள் அந்த கப்பலுக்கு நுழையும் அனுமதியை இலங்கை வழங்குவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டது.
எனினும் நீண்ட நாட்கள் இலங்கையில் தரித்திருந்து ஆய்வு பணிகளில் ஈடுபடும் செயற்பாடு, இரண்டு நாட்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.
புதிய கோரிக்கைக்கான கப்பலின் செயற்பாடு
இந்த நிலையில் புதிதாக விடுக்கப்பட்டுள்ள கோரிக்கைக்கான கப்பல், கடல்சார் ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சி ஆய்வுகளில் ஈடுபடும். இந்த கப்பல் 2016 இல் கட்டப்பட்டது. 99.8 மீட்டர் நீளமும் 17.8 மீட்டர் அகலமும் கொண்ட இந்த கப்பல் நவீன வசதிகளைக் கொண்டது.
2024ஆம் அடுத்த ஆண்டு ஜனவரி 5 முதல் பெப்ரவரி 20 வரைக்கான காலப்பகுதியில் இலங்கைக்கு வரும் நோக்கிலேயே இந்தக்கப்பலுக்கான அனுமதி கோரப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





உக்ரைனுக்கு எதிராக மீண்டும் அதிரடி முடிவெடுத்த கிம் ஜோங் உன்... 100,000 வீரர்கள் தயார் News Lankasri

அபாயகரமான முறையில் குழந்தைகளுடன் கடலுக்குள் இறங்கும் புலம்பெயர்வோர்: பதறவைக்கும் காட்சிகள் News Lankasri

சன் டிவியில் ஒளிபரப்பாகும் 2 ஹிட் சீரியல்களின் மெகா சங்கமம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam

விளாடிமிர் புடின் உட்பட... சீனாவில் ஒன்று கூடும் உலகத்தலைவர்கள்: ட்ரம்பிற்கு புதிய நெருக்கடி News Lankasri

ரவி மோகன் பேசியதை கேட்டு கெனிஷா கண்ணீர்.. சொத்துக்கள் முடக்கம், பிரச்சனைகள் பற்றி எமோஷ்னல் Cineulagam
