இலங்கை தொடர்பில் சீனா வழங்கியுள்ள உறுதிமொழி! வெளியான தகவல்
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு உதவுவதாக சீனா உறுதிமொழி வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீனாவின் உறுதிமொழியைத் தொடர்ந்து சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடன் பெற்றுக் கொள்ளும் நடவடிக்கை துரிதப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 2.92 பில்லியன் டொலர் கடனுதவி பெற்றுக் கொள்ள இலங்கை முயற்சித்து வருகின்றது.
சீன அரசாங்கத்தின் அறிவிப்பு
கடன் மறுசீரமைப்பிற்கு இணங்குவது தொடர்பில் இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் சீன அரசாங்கம் அறிவித்துள்ளது.
அதன்படி இலங்கை தொடர்பிலான சர்வதேச நாணய நிதியத்தின் நடவடிக்கைகளை அங்கீகரிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விரைவில் நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கி வரும் இலங்கை, சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவியை எதிர்பார்த்து காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.