இலங்கைக்கு ஆதரவான நாடுகளுடன் இணைந்து செயற்பட தயார் : சீனாவின் அறிவிப்பு
கடனை நிலைநிறுத்துவதில் இலங்கைக்கு ஆதரவாக தொடர்புடைய நாடுகள் மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்ற சீனா தயாராக இருப்பதாக சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மாவோ நிங்(Mao Ning ) தெரிவித்துள்ளார்.
சீனாவின் ஏற்றுமதி-இறக்குமதி வங்கி இலங்கையுடன் கடன் மறுசீரமைப்புக்கு முதன்முதலில் தற்காலிகமாக உடன்பட்டுள்ளது.
இது, இலங்கைக்கு நிதி சீர்திருத்தத்தை முன்னெடுத்துச் செல்வதற்கும் சர்வதேச கடன் வழங்குநர்களின் ஆதரவைப் பெறுவதற்கும் முக்கியமானதாக உள்ளது என்று அவர் பீய்ஜிங்கில் தனது வழக்கமான செய்தியாளர் மாநாட்டின் போது தெரிவித்துள்ளார்
கடன் நிலைத்தன்மையை உணர்ந்து கொள்வதில் இலங்கைக்கு ஆதரவளிக்கும் வகையில் தொடர்புடைய நாடுகள் மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்ற சீன தரப்பு தயாராக இருப்பதாக அவர் இதன்போது கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |