உலகில் முதன்முறையாக சந்திரனின் மர்ம பகுதியை ஆய்வு செய்யவுள்ள சீனா
உலகில் முதன்முறையாக சந்திரனின் தொலைதூர பகுதியான மர்ம பகுதியை ஆய்வு செய்து பாறைகள் மற்றும் மண்ணை சேகரிப்பதற்காக சீனா விண்கலம் ஒன்றை ஏவியுள்ளது.
குறித்த விண்கலமானது, நேற்றையதினம் (03.05.2024) தெற்கு ஹைனான் தீவில் உள்ள வென்சாங் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து சந்திரனுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்த விண்கலமானது, சந்திரனில் இருந்து மாதிரிகளை மீட்ட பின்பு மீண்டும் பூமிக்கு திரும்பவுள்ளது.
சர்வதேச விஞ்ஞானிகள்
இந்த விண்கலமானது ஏவப்பட்ட போது, பிரான்ஸ், இத்தாலி, பாகிஸ்தான் மற்றும் ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் கலந்துகொண்டிருந்தனர்.
சந்திரனின் சுற்றுவட்ட பாதையில் இந்த விண்கலம் பயணித்து ஜூன் மாதத்தில் சந்திரனின் தொலைதூர பகுதியில் தரையிறங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மர்ம பகுதி
சந்திரனின் சுற்றுவட்ட பாதையில் இந்த விண்கலம் பயணித்து ஜூன் மாதத்தில் சந்திரனின் தொலைதூர பகுதியில் தரையிறங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்திரனின் தொலைதூர பகுதி, அறிவியலால் இதுவரை பார்க்கப்படவில்லை என்பதால் அந்த பகுதி மர்மமான ஒரு இடமாக கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |