சிங்கப்பூர் மாநாட்டில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் துறைமுக நகரம்!
உலக நகரங்களின் உச்சி மாநாடு, 2022 ஆம் ஆண்டு ஜூலை 31 ஆம் திகதி முதல் 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3 ஆம் திகதி வரை சிங்கப்பூரின் மெரினா பே சாண்ட்ஸில் நடைபெறும்.
இந்த உச்சி மாநாட்டில் சீனாவின் முதலீட்டிலான கொழும்பு போட் சிட்டி, இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்துகிறது.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த உலகளாவிய நிகழ்வில், 90 நாடுகளை சேர்ந்த நகர தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.
உச்சி மாநாடு
போர்ட் சிட்டி கொழும்பு, தெற்காசியாவிலேயே மிகவும் வாழத் தகுதியான நகரமாக தன்னை கருதுகிறது. அத்துடன் வாழ்க்கை வசதியை மேம்படுத்தும் வகையில் அதன் ஸ்மார்ட் சிட்டி கருத்தாக்கத்துடன் தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்துகிறது.
மூன்றாவது நாள் உச்சி மாநாட்டில் கொழும்பு போர்ட் சிட்டியின் துணை நிர்வாக இயக்குநர் துல்சி அலுவிஹாரே கலந்துக்கொள்ள உள்ளார். அங்கு அவர் நகரங்களின் வளர்ச்சியை எவ்வாறு கூட்டாண்மை மாற்ற முடியும்? என்ற தலைப்பில் பேசவுள்ளார்.
போட் சிட்டி நிர்வாகத்தின் தகவல்
இந்தநிலையில் கொழும்பு போர்ட் சிட்டியை, சிறந்த தரமான வர்த்தக,பொழுதுபோக்கு,
மருத்துவம், கல்வி மற்றும் வாழ்க்கை முறை வாய்ப்புகளை வழங்கும் ஒரு முன்மாதிரி
நகரமாக மாற்றி, இலங்கையை தெற்காசியாவில் மட்டுமன்றி உலகளாவிய முன்னணி நாடாக
மாற்றும் என்ற அடிப்படையில் செயல்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக போட் சிட்டி
நிர்வாகம் தெரிவித்துள்ளது.