டெல்லியின் கடும் அழுத்தம்: சீன கப்பலுக்கு அனுமதி வழங்குவதில் இலங்கைக்கு சிக்கல்
இலங்கை கடற்பரப்பில் சீனாவின் நடவடிக்கைகள் குறித்து, புவிசார் அரசியல் போட்டியாளர்கள், சந்தேகம் கொண்டுள்ளதால், இலங்கைக்கு வரவிருக்கும் சீனஆராய்ச்சிக் கப்பலான SHI YAN 6 க்கு அனுமதி வழங்குவதில் வெளியுறவு அமைச்சகம் குழப்பத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவின் உத்தரவின் கீழ் பயணிக்கும் இந்த ஆராய்ச்சி கப்பல், இலங்கை தேசிய நீர்வள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்துடன் (NARA) இணைந்து ஆராய்ச்சியை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாரா வலியுறுத்து
இதற்கமைய சீன அதிகாரிகள் அதற்கான அனுமதியை கோரியுள்ளனர். ஆனால் வெளியுறவு அமைச்சகம் இன்னும் முடிவு செய்யவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இந்தியா மற்றும் சீனா ஆகிய இரண்டு சக்திகளின் புவிசார் அரசியல் போட்டியை எவ்வாறு வழிநடத்துவது குறித்த கேள்விக்கு மத்தியிலேயே இலங்கை வெளியுறவு அமைச்சு சிந்திப்பதாக கூறப்படுகிறது.
எனினும் சீன கப்பலுடன் கூட்டு ஆராய்ச்சியை மேற்கொள்வதற்கு நாரா ஆர்வமாக இருப்பதாகவும், எனவே குறித்த கப்பல் நாட்டிற்குள் அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் நாரா வலியுறுத்தியுள்ளது.
இதேவேளை இந்தியாவின் கவலைகள் இருந்தபோதிலும் சீனாவும் கப்பலை அனுப்ப ஆர்வமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
you may like this





அதிக அளவில் நஷ்டம்.., தான் விளைவித்த காய்கறியை வைத்து 10 ரூபாய்க்கு வெஜ் பிரியாணி வழங்கும் விவசாயி News Lankasri
