சீன கப்பலிற்கு அனுமதி வழங்கும் விவகாரம்! வெடித்தது புதிய சர்ச்சை
சீன கப்பலிற்கு அனுமதி வழங்குமாறு சீன தூதரகம் விடுத்துள்ள வேண்டுகோளை ஏற்றுக்கொள்வதா? இல்லையா? என்பது குறித்து இலங்கை அரசாங்கம் இன்னமும் தீர்மானம் எதனையும் எடுக்கவில்லை என வெளிவிவகார அமைச்சின் பொதுமக்கள் இராஜதந்திர பிரிவின் இயக்குநர் பிரியங்க விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த வேண்டுகோள் தொடர்பில் வழமையான இராஜதந்திர நடைமுறைகளை அமைச்சு பின்பற்றுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை சீன கப்பல் ஒக்டோபர் 25 ஆம் திகதி இலங்கை வரவுள்ளது. நவம்பர் 11 ஆம் திகதி கப்பல் இலங்கையில் தரித்து நிற்கும் என இலங்கை கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்து சமுத்திரத்தில் அதிகரித்துள்ள பதற்றங்கள் காரணமாக முன்னர் வழமையான துறைமுக விஜயங்களாக காணப்பட்டவை தற்போது சவால்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதால் அரசாங்கம் நெருக்கடியான நிலையில் உள்ளது என முன்னாள் இராஜதந்திரியொருவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் கரிசனை
இதேவேளை சீன கப்பலின் வேவு பார்க்கும் திறன் குறித்த இந்தியாவின் கரிசனைகளை நிராகரிக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் 4000 தொன் ஆழகடல் ஆராய்ச்சி கப்பல் புவி இயற்பியல் மேற்கொள்ளக்கூடியது. மேலும் கடலியல், கடல் சூழலியல், புவியியல் ஆகியவற்றை படிப்பதுடன் நிலம் சார்ந்த ஆய்வுகளை மேற்கொள்வதற்கான மாதிரிகளை சேகரிக்ககூடியது.
வெளிநாட்டு கப்பல்களுடன் அறிவியல் கடல்சார்வியல் தொடர்பான ஆராய்ச்சிகளின் மையப்புள்ளியாக தேசிய நீர்வள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் காணப்படுகின்றது. இது சீனாவிலிருந்து வரும் கப்பல்களுக்கும் பொருந்தும் என கூறியுள்ளார்.
இந்நிலையில் இந்தியா-சீனா பதற்றம் மீண்டும் தலைதூக்கியுள்ளதுடன் இந்து சமுத்திரத்தில் இலங்கையின் நடுநிலை தன்மையை சோதிப்பதாகவும் சீனாவின் சின் யான் 6 ஆராய்ச்சி கப்பலிற்கு அனுமதியளிப்பதா என்ற விடயம் ரணில் விக்ரமசிங்கவிற்கு தலைவலியை ஏற்படுத்துவதாகவும் மாறியுள்ளது.





ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 17 மணி நேரம் முன்

பட்டப்பகலில் கொடூர சம்பவம்... பொதுமக்கள் கண் முன்னே புலம்பெயர் குடும்பம் எடுத்த அதிர்ச்சி முடிவு News Lankasri
