சனத் தொகையை அதிகரிக்க சீனா எடுக்கும் நடவடிக்கை - செய்திகளின் தொகுப்பு
சீனாவில் சடுதியாக குறைந்து வரும் மக்கள் தொகையை அதிகரிக்கும் நோக்கில் சீன அரசாங்கம், அந்நாட்டு இளைஞர்களை விந்தணு தானம் செய்யுமாறு வலியுறுத்தி உள்ளது.
அண்மைய கோவிட் தொற்றால் பெருமளவானோர் உயிரிழந்தமை மற்றும் பிறப்பு வீதம் குறைவடைந்தமை காரணமாக சீனாவில் சனத்தொகையின் அளவு வீழ்ச்சி கண்டுள்ளது.
இந்த நிலையில், அந்நாட்டு அரசாங்கம் மக்கள் தொகை பெருக்கத்தை அதிகரிக்க புதிய திட்டங்களை அறிவித்து வருகிறது.
ஆரோக்கியமான எவ்வித மரபணு நோய் பாதிப்புகளும் இல்லாத 20 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கு விந்தணு தானம் செய்ய வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பிலான முழுமையான செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான காலைநேர செய்திகளின் தொகுப்பு,




