தென் ஆபிரிக்க கடற்பரப்பில் சீனா, ரஷ்யா மற்றும் ஈரான்
தென் ஆபிரிக்க கடற்பரப்பில் சீனா, ரஷ்யா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் ஒன்றிணைந்து முன்னெடுக்கும் ஒரு வார கால கூட்டு கடற்படை பயிற்சிகள் இன்று ஆரம்பமாகின.
'BRICS Plus' நாடுகளின் ஒத்துழைப்புடன் நடைபெறும் இந்தப் பயிற்சியானது, கடல்சார் போக்குவரத்து மற்றும் பொருளாதார நடவடிக்கைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முறுகல் நிலை அதிகரித்துள்ள சூழலில்
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆபிரிக்கா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய பிரிக்ஸ் (BRICS) அமைப்பானது, தற்போது மேலும் பல நாடுகளை உள்வாங்கி 'BRICS Plus' ஆக விரிவடைந்துள்ளது.

அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் பொருளாதார ஆதிக்கத்திற்கு மாற்றீடாகப் பார்க்கப்படும் இந்தக் கூட்டணியில் எகிப்து, இந்தோனேசியா, சவூதி அரேபியா, எத்தியோப்பியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகளும் அங்கம் வகிக்கின்றன.
இந்தநிலையில், இந்த கூட்டுப் பயிற்சியில் ஆரம்ப விழாவில் பிரேசில், எகிப்து மற்றும் எத்தியோப்பியா ஆகிய நாடுகள் கண்காணிப்பாளர்களாகப் பங்கேற்றன.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்துக்கும், பிரிக்ஸ் உறுப்பு நாடுகளுக்கும் இடையே முறுகல் நிலை அதிகரித்துள்ள சூழலில் இந்தப் பயிற்சி நடைபெறுகிறது.
எவ்வாறாயினும்,"அமைதிக்கான விருப்பம் 2026" (Exercise WILL FOR PEACE 2026) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் பயிற்சியானது, அரசியல் நோக்கங்களைக் கொண்டது அல்ல எனவும், அமெரிக்காவுக்கு எதிரான விரோதப் போக்கு இதில் இல்லை எனவும் தென் ஆபிரிக்க இராணுவம் விளக்கமளித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |