வலுக்கும் சீன - அமெரிக்க வர்த்தக மோதல்! ட்ரம்பின் வரி விதிப்புக்கு பதிலடி!
ஏப்ரல் 10 முதல் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களுக்கு 84% வரி விதிக்கப்போவதாக சீனா அறிவித்துள்ளது.
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சீன மின்சார வாகனங்களுக்கு 104% வரி விதித்ததற்கு பதிலளிக்கும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சீன நிதி
சீன நிதி அமைச்சகத்தின் கூற்றுப்படி, புதிய வரி விகிதம் அமெரிக்கப் பொருட்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்ட 34% இலிருந்து அதிகரிப்பைக் குறிக்கிறது.
இதன்படி அமெரிக்கா-சீனா வர்த்தக பதற்றங்கள் தொடங்கியதிலிருந்து இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் பொருட்களின் மீது பல சுற்று வரிகளை விதித்துள்ளது.
சீன இறக்குமதிகள் மீது 104% வரி உட்பட அமெரிக்காவின் புதிய வரிகள் புதன்கிழமை முதல் நடைமுறைக்கு வந்துள்ளன.
இதனால், சீன நாணயத்தின் மதிப்பு கடுமையான சரிவைச் சந்தித்துள்ளது.
சீனா நாணயமான யுவான் 2007இன் மதிப்புக்கு சரிந்ததாக கூறப்படுகிறது.
ஒரே இரவில் நடந்துள்ள இந்த சரிவு வரலாறு காணாதது என்றும் கூறப்படுகிறது.
அமெரிக்க டாலருக்கு நிகரான யுவானின் மதிப்பு 7.3498 ஆக சரிந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |