சர்ச்சைக்குரிய சீனக் கப்பல்....! இலங்கைக் கடலில் ஆய்வுப்பணிகள் ஆரம்பம்
நாட்டை வந்தடைந்துள்ள சர்ச்சைக்குரிய சீன ஆய்வுக் கப்பலான "ஷி யான் 6", நாரா நிறுவனத்துடன் இணைந்து ஆய்வு நடவடிக்கைகளை ஆரம்பிக்க உள்ளது.
சீன ஆய்வுக் கப்பலானது இன்று (30.10.2023) நாட்டின் மேற்குக் கடலில் தனது ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளது.
அத்துடன் குறித்த கப்பல் இன்றும் நாளையும் (31) ஆய்வுகளை மேற்கொள்ள வெளிவிவகார அமைச்சு அனுமதி வழங்கி உள்ளது.
பரிசோதனைகள்
இந்த ஆராய்ச்சிக்கு அமைய கப்பலின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மேற்குக் கடலின் நீர் மாதிரிகள் எடுக்கப்படவுள்ள நிலையில், அதில் நாரா நிறுவனம் மற்றும் கடற்படை வீரர்களும் பங்கேற்கவுள்ளனர்.
குறித்தஆய்வின் போது கடல் நீரின் உப்புத்தன்மை மற்றும் வெப்பநிலை குறித்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
மேலும், கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை இந்த சோதனைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் வில்லனாக நடிக்கவிருந்தது இவர் தான்.. யார் தெரியுமா Cineulagam

சிறிய தீவில் 2 சடலங்களும் 39 புலம்பெயர் மக்களும்... கண்டுபிடித்த கிரேக்க கடலோர காவல்படை News Lankasri
