இலங்கையில் நடந்த சங்கர் மகாதேவன் நிகழ்ச்சி: சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த கடிதம்
கடந்த மாதம் 29ஆம் திகதி கொழும்பில் நடத்தப்பட்ட “சங்கர் மகாதேவன் லைவ் இன் கொன்சர்ட்” நிகழ்ச்சி, மொட்டுக் கட்சியை மீண்டும் கட்டியெழுப்பும் நோக்கில் அரசியல்வாதிகளுடன் இணைந்து ஒழுங்கு செய்யப்பட்டது என பரப்பப்படும் கருத்துக்கள் உண்மைக்கு புறம்பானது என்று அந்த நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளரான Aaraa Entertainment நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆனந்த் ராமநாதன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த நிகழ்ச்சி எந்த ஒரு அரசியல் கட்சிக்காகவோ அல்லது அரசியல்வாதிகளுக்காகவோ ஒழுங்குசெய்யப்பட்ட நிகழ்ச்சியல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அந்த நிறுவனத்தினர் வெளியிட்டுள்ள தெளிவுப்படுத்தல் அறிக்கையில்,
இதே போன்று பலவருட அனுபவம் வாய்ந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களாகிய நாங்கள் எக்காரணம் கொண்டும் அரசியல் நோக்கத்திற்காக அல்லது அரசியல்வாதிகளுக்காக செயற்பட்டதுமில்லை.
செயற்படப் போவதுமில்லை என்பதனை பொறுப்புள்ள தமிழ் நிகழ்ச்சி ஏற்பாட்டாளராக கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.
எதிர்காலத்தில் நடத்தப்படவிருக்கும் மிக பிரம்மாண்டமான நிகழ்ச்சிகளை, பிரபல ஊடகமாகிய தமிழ்வின் அணுசரணையுடன், நாங்கள் நடத்தி வெற்றியடைச் செய்வதை சீர்குலைக்கும் நோக்கில் சிலரால் வழங்கப்பட்ட போலி தகவல் இது என்பதை நாம் அறிவோம்.
மேலும் எதிர்காலத்தில் தமிழ்வின் ஊடகத்துடன் பயணிக்கும் வண்ணம் செயல்படுவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
கடந்த சில மாதங்களாக இலங்கையில் பல்வேறு தரப்பினர் பிரபல பாடகர்களை இலங்கைக்கு வரவழைத்து மிகச்சிறப்பான முறையில் இசை நிகழ்ச்சிகளை நடாத்தி வரும் நிலையில், நேற்று (29-10-2023) சுகததாச உள்ளக அரங்கில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியின் பாடல்கள் மக்களை கவர்த்திருந்தன.
ஆனாலும் எதிர்பார்த்த அளவிற்கு மக்கள் வருகையும், விற்பனையாகியிருக்கும் டிக்கட்களின் எண்ணிக்கையும் மிககுறைந்திருந்ததனையும் காணக்கூடியதாக இருந்தது.
இதற்கு பிரதான காரணங்கள் இரண்டு , மொட்டு கட்சியினை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான முன்னாயத்தங்களாக சிங்கள அரசியல்வாதிகளுடன் இணைந்து தமிழ் மக்களிடமிருந்து விளையாட்டுதுறைக்கு பணம் சேகரிப்பதற்காகவும், வளர்ந்து வரும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களின் வரவிருக்கும் நிகழ்ச்சிகளை சூழ்ச்சியான முறையில் தோற்கடித்து தமிழ் மக்களை திசை திருப்புவதற்குமாகவே அமைந்திருப்பதை அவதானிக்க கூடியதாக இருந்தது.
பார்வையாளர்களுக்கு இடையூறு
கடந்த சில மாதங்களுக்கு முன் பல வெற்றி நிகழ்ச்சிகளை நடாத்தி வந்த AARA Entertinment நிறுவனம் பல இன்னல்களுக்கு மத்தியில் எதிர்பார்த்த டிக்கெட் விற்பனையில் 50% குறைவான டிக்கட்டுகளே விற்பனையாகியிருக்கும் பட்சத்தில் 360 பாகையில் மேடை அமைக்கப்பெற்றிருக்கும் என்று விளம்பரம் செய்ததாகவும் பார்வையாளர்கள் விசனம் தெரிவித்தனர்.
அது மட்டுமன்றி பணம் கொடுத்து டிக்கெட் வாங்கியவர்கள் விருப்ப பாடல்கள் எத்தனையோ இருந்த போதிலும் அரசியல் பிரமுகர்களின் விருப்ப பாடல்களும், பார்வையாளர்களுக்கு இடையூறாகும் வகையில் இடைநடுவில் சிங்கள அரசியல்வாதிகளின் நடனங்களும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
அதுமாத்திரமன்றி, பார்வையாளர்களின் எண்ணிக்கையை கூட்டுவதற்காக நூற்றுக்கணக்கான இலவச டிக்கெட்டுகளை கொடுத்திருந்தனர் என்கிற தகவல்களும் வெளியாகியிருக்கிறது.
பல பிரபல பாடகர்களின் இசை நிகழ்ச்சியை எதிர்வரும் மாதங்களில் ஒழுங்கு செய்துக்கொண்டிருக்கும் AARA ENTERTINMENT இந்நிகழ்ச்சியில் பல்வேரு இன்னல்களை சந்தித்திருப்பது மட்டுமல்லாது இந்நிகழ்ச்சியை சரியான முன்னேட்பாடுகளின்றி செய்திருப்பதனால் எதிர்வரும் நிகழ்ச்சிகள் முன்னேட்பாடுகளுடன் நடைபெறுமா? இசையால் வாக்கு சேகரிப்பு இடம்பெறுமா? என்ற கேள்வி பர்வையாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.