உலக சுகாதார அமைப்பின் திட்டத்தை நிராகரித்தது சீனா
கொரோனா வைரஸின் தோற்றம் குறித்த இரண்டாம் கட்ட விசாரணைக்கான உலக சுகாதார அமைப்பின் (WHO) திட்டத்தை சீனா நிராகரித்துள்ளது.
இந்த விசாரணைகளில் ஒரு சீன ஆய்வகத்திலிருந்து கொவிட்-19 வைரஸ் பரவியிருக்கலாம் என்ற கருதுகோள்கள் முன்வைக்கப்பட்ட பின்னர் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இது குறித்து பீஜிங்கில் இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் உரையாற்றிய சீன சுகாதார ஆணையத்தின் துணை அமைச்சர் ஜெங் யிக்சின், உலக சுகாதார அமைப்பின் திட்டத்தை முதன்முதலில் படித்தபோது நான் அதிர்ச்சியடைந்ததாக தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தோற்றம் பற்றிய அடுத்த கட்ட விசாரணைக்கான உலக சுகாதார அமைப்பின் திட்டம் பொது அறிவை மதிக்கவில்லை. அது அறிவியலுக்கு எதிரானது. அத்தகைய திட்டத்தை நாங்கள் ஏற்றுக்கொள்வது சாத்தியமில்லை என்று அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பான மேலும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகின்றது முக்கிய செய்திகளின் தொகுப்பு,
வருமுன் காத்தல்: அனர்த்த காலத்தின் பேச்சாளர்கள் 4 மணி நேரம் முன்
வெற்றியின் சிகரத்தில் இருந்தாலும் மற்றவர்களை மதிக்கும் 3 ராசியினர்: யார் யார்ன்னு தெரியுமா? Manithan