ஈரானுக்கு ஆயுதங்கள் வழங்கியதாக வெளியான தகவலை மறுக்கும் சீனா
சீனாவில் தயாரிக்கப்பட்ட தோளில் வைத்து இயக்கும் 400 வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகளை ஈரான் இன்னும் சில வாரங்களில் பெறவுள்ளதாக சர்வதேச செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்ட செய்தி முற்றிலும் தவறானது என்றும் உண்மைக்குப் புறம்பானது என்றும் சீனா மறுத்துள்ளது.
குறித்த ஊடகம் பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரப்பூர்வ ஆதாரங்களை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது.
அதில், சீனாவிலிருந்து ஈரானுக்கு வான் பாதுகாப்பு அமைப்புகள் வழங்கப்படவுள்ளதாகக் கூறப்பட்டிருந்தது.

அந்தச் செய்தியின்படி, முதற்கட்டமாகச் மேற்கு சீனாவில் உள்ள உரும்கி நகரிலிருந்து விமானங்கள் மூலம் பாகிஸ்தான் வழியாக ஈரானுக்கு இந்த ஏவுகணைகள் கொண்டு செல்லப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
பீஜிங்கில் நடைபெற்ற வழக்கமான செய்தியாளர் சந்திப்பில் சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவோ இது குறித்து கருத்து வெளியிட்டுள்ளார்.
தொடர்புடைய விவகாரங்களில் சீனா பலமுறை தனது நிலையைத் தெளிவுபடுத்தியுள்ளது. இந்தச் செய்திகள் முற்றிலும் உண்மையற்றவை மற்றும் ஆதாரமற்றவை.
சீனா எப்போதும் அமைதிக்காகவும் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவரவுமே பாடுபடுகிறது என தெரிவித்துள்ளார்.
இந்த ஏவுகணை விநியோகத்திற்கான வழித்தடமாக குறிப்பிடப்பட்டிருந்த பாகிஸ்தானும் ஒரு நாளுக்கு முன்பாகவே இச்செய்தியை மறுத்திருந்தது.
கறுப்பு ஜூலை 1983ஆம் ஆண்டின் ஆறாவடுவும் தீராத தமிழர் பிரச்சினையும் 10 மணி நேரம் முன்
வாய்ப்பு கொடுக்க படுக்கைக்கு அழைத்த நபர், அய்யனார் துணை நடிகை வேதனை... சொன்ன திடுக்கிடும் தகவல் Cineulagam
ஹார்முஸ் முடக்கத்தால் தத்தளிக்கும் ஆசிய நாடுகள்... சத்தமின்றி கனடா பக்கம் திரும்பிய ஜப்பான் News Lankasri