அநுரவை வரவேற்க தயாராகும் சீனா அரசாங்கம்
இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் எதிர்கால சீன விஜயத்தின் போது அவரை வரவேற்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சீன மக்கள் அரசியல் ஆலோசனை மாநாட்டின் (CPPCC) தேசியக் குழுத் துணைத் தலைவர் Qin Boyong, இதனை தெரிவித்துள்ளார்.
சீன அரசாங்கம் வழங்கிய ஆதரவு
நேற்று இலங்கை நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் ஜனாதிபதியுடனான சந்திப்பின் போதே அவர், இதனை தெரிவித்ததாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) குறிப்பிட்டுள்ளது.

இந்த சந்திப்பின் போது, கடன் மறுசீரமைப்பு மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுக்கும் போது சீன அரசாங்கம் வழங்கிய ஆதரவுக்காக ஜனாதிபதி தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், இரண்டு நாடுகளுக்குமிடையிலான நீண்டகால உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில், இலங்கையின் புதிய அரசாங்கத்துடன் தனது பணியை தொடர சீனா எதிர்பார்த்துள்ளதாக Qin Boyong குறிப்பிட்டுள்ளார்.
நிறுத்தப்பட்ட கடல்சார் ஆராய்ச்சி
இதற்கிடையில், சீன நிர்வாகத்தின் கீழ் மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் முடிக்கப்படாத பகுதிகளை நிறைவு செய்வதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த ஜனாதிபதி திஸாநாயக்க, கொழும்பு துறைமுக நகரம் மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டத்தை மையமாகக் கொண்ட விநியோக மையங்கள் மற்றும் நிறுவன திட்டங்கள் துரிதப்படும் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, பல்வேறு காரணங்களுக்காக தற்காலிகமாக நிறுத்தப்பட்ட கடல்சார் ஆராய்ச்சி நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக சீன அதிகாரியான Qin Boyong குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
எல்லைமீறிய கவர்ச்சியில் பிக் பாஸ் சாக்ஷி அகர்வால்.. நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்கள் Cineulagam
சுவிட்சர்லாந்தின் மன்னர் என அறிவித்த நபர்..117,000 சதுர மீற்றர் சாம்ராஜ்யம்..அரசியல்வாதிகள் சீற்றம் News Lankasri
பாண்டியன் ஸ்டோர்ஸ் - அழகே அழகு சீரியல்கள் மகா சங்கமம்.. ஒளிபரப்பு நேரம், தேதி எப்போது தெரியுமா? Cineulagam