சீன அரசாங்கத்துக்கு சொந்தமான தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளிக்க இலங்கை அரசாங்கத்துக்கு சீனா அழுத்தம்
சீன அரசாங்கத்துக்கு சொந்தமான சினோபார்ம் நிறுவனம் தயாரித்த கொரோனா தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளிக்க இலங்கை அரசாங்கத்துக்கு சீனா அழுத்தம் கொடுத்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்தியாவின் 500,000 தடுப்பூசிக்குப்பிகள் இலங்கைக்கு வழங்கப்பட்ட பின்னர் இந்த அழுத்தம் கொடுக்கப்பட்டதாக தெ இக்கோனோமிக்ஸ் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
இதன் அடிப்படையில் இலங்கைக்கு 300,000 குப்பி தடுப்பூசிகளை அன்பளிக்க சீனா முடிவு செய்துள்ளதாக இக்கோனோமிக்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.
இந்தியாவின் "தடுப்பூசி இராஜதந்திரம்" அல்லது நட்பு நாடுகளுக்கு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை பரிசாக வழங்குவதற்கான முடிவு ஆகியவற்றால் இலங்கையர்கள் மத்தியில் சீனா பின்நோக்கித் தள்ளப்பட்டதாக எக்கனோமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இதனையடுத்தே கொழும்பில் உள்ள சீனத் தூதரகம், சினோபார்ம் தடுப்பூசிகள் மற்றும் அவற்றின் செயல்திறன் ஆகியவற்றை வேறு சில நாடுகளின் ஒப்புதலைக் காரணம் காட்டி இலங்கையும் அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுத்துள்ளது.
கொவிஷீல்ட் தடுப்பூசிகளை இலங்கைக்கு பரிசளிப்பதாக இந்தியா அறிவித்த சிறிது நேரத்திலேயே சீனாவின் இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்று கொழும்பைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளதாக இக்கொனோமிக்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.