பிரதமர் ஹரிணியை சந்தித்த சீன ஜனாதிபதி
சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியவை சந்தித்துள்ளார்.
குறித்த சந்திப்பு இன்று(14.10.2025) காலை பீஜிங்கில் உள்ள மக்கள் மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கு ஆதரவளிப்பது சீனாவின் விருப்பம் என சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் இதன்போது தெரிவித்துள்ளார்.
'வன் பெல்ட் வன் ரோட்'
அத்துடன், சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான பாரம்பரிய நட்பு நீண்ட காலமாக நிலவி வருவதாகவும் இரு நாடுகளும் அமைதி மற்றும் சகவாழ்வு கொள்கைகளின் அடிப்படையில் இருதரப்பு உறவுகளை தொடர்ந்து வளர்த்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Chinese President Xi Jinping on Tuesday met with Sri Lankan Prime Minister Harini Amarasuriya, who is in Beijing for the Global Leaders' Meeting on Women: Xinhua (Video: CCTV News) pic.twitter.com/5YRQFTexCw
— Global Times (@globaltimesnews) October 14, 2025
மேலும், இலங்கையுடன் 'வன் பெல்ட் வன் ரோட்' (One Belt One Road) திட்டத்தை தரமான முறையில் கூட்டாக உருவாக்க சீனா தயாராக உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, இலங்கை சீனாவுடனான அதன் உறவை மதிக்கும் அதேவேளை, 'வன் பெல்ட் வன் ரோட்' முயற்சியை ஆதரிப்பதாகவும் ஹரிணி அமரசூரிய கூறியுள்ளார்.
அத்துடன், இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கு சீனா அளித்து வரும் ஆதரவிற்கு அவர் நன்றியும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



