செம்மணி மனிதபுதைகுழி அகழ்வுப் பணி தாமதம்
செம்மணி சித்துப்பாத்தி மனிதபுதைகுழி அகழ்வுப் பணிகளுக்கு அமைச்சால் நிதி வழங்கப்பட்டும் தொடர்ச்சியான மழையால் அகழ்வுப் பணிகள் தாமதிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
செம்மணி சித்துப்பாத்தி மனிதபுதைகுழி வழக்கு நேற்று காலை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
மனிதபுதைகுழியை பார்வையிட்ட நீதவான்
வழக்கின் பின்னர் நீதவான் உள்ளிட்ட குழுவினர் செம்மணி சித்துப்பாத்தி மனிதபுதைகுழி பகுதியைப் பார்வையிட்டனர்.
இதன்போது அந்த இடம் ஒரு களிமண் தரையாகக் காணப்படுகின்றது. தொடர்ச்சியாக மழை பெய்யுமாக இருந்தால் இந்த இடத்தில் அகழ்வுப் பணிகள் மேற்கொள்வது மிகவும் சிரமமானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எடுக்கப்பட்ட தீர்மானம்
ஆகவே இந்த வழக்கு மீண்டும் திறந்த நீதிமன்றத்தில் எதிர்வரும் நவம்பர் மாதம் 3ஆம் திகதி எடுத்துக்கொள்ளப்படும் என தீர்மானிக்கபப்ட்டது.
அதேவேளை சட்டவைத்திய அதிகாரி பிரணவன் செல்லையாவால் புதைகுழி அகழ்வுக்கு கோரப்பட்ட நிதி, நீதி அமைச்சால் அனுமதிக்கப்பட்டு அகழ்வுப் பணியைத் தொடர குறித்த தொகை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
You may like this,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





பிணைக் கைதிகள் உடல்களை ஒப்படைப்பதில் சிக்கல்: ஒப்பந்தத்தை மீறியதாக இஸ்ரேல் குற்றச்சாட்டு News Lankasri
