வாகன ஏற்றுமதியில் முதலிடத்தைப் பிடித்தது சீனா
உலகின் முன்னணி கார் ஏற்றுமதியாளராக சீனா மாறியுள்ளது.
ஜப்பானை பின்னுக்குத் தள்ளி சீனா முதலிடத்தைப் பிடித்துள்ளது.
2023 முதல் காலாண்டில் 1.07 மில்லியன் கார்களை ஏற்றுமதி செய்துள்ளதாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மின்சார கார்களுக்கு முன்னுரிமை

அந்த காலகட்டத்தில், ஜப்பான் 954,185 கார்களை மட்டுமே ஏற்றுமதி செய்துள்ளது. இதற்கிடையில், பெட்ரோலில் இயங்கும் கார்களுக்குப் பதிலாக மின்சார கார்களுக்கு சீனா முன்னுரிமை அளித்தது அவர்களுக்கு சாதகமாக அமைந்துள்ளதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.
தற்போது, உலகெங்கிலும் உள்ள பல நாடுகள் தங்கள் போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்ய மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு முன்னுரிமை அளித்துள்ளன.
2022 ஆம் ஆண்டில், சீன மின்சார கார்களின் ஏற்றுமதி முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது 90 சதவீதம் அதிகரித்துள்ளது என்றும் குறிப்பிடப்படுகின்றது.
சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 5 போட்டியாளர் மித்ரா அம்மா-அப்பாவிற்கு கிடைத்த பெரிய உதவி... Cineulagam
கணவருடன் ரொமான்டிக் mirror selfie! VJ பிரியங்கா - வசி ஜோடியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பாருங்க Manithan
பாரிஸ் அவசரக் கூட்டத்தில் பங்கேற்க மறுத்த ட்ரம்ப் - கிரீன்லாந்து விவகாரம் மீதான சர்ச்சை தீவிரம் News Lankasri
திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்; அதிமுக கூட்டணியில் டிடிவி - அதிர்ச்சியில் விஜய் News Lankasri