ராஜபக்ச அரசுக்கு கைகொடுத்த சீனா இப்போது கன்னத்தில் அறைகின்றது! - ஐ.தே.க சாடல்
ராஜபக்ஷக்கள் ஆட்சிக்கு வருவதற்கு கைகொடுத்த சீனா, இப்போது அவர்களின் கன்னத்தில் அறைய ஆரம்பித்துள்ளது என்று ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார (Palitha Range Bandara) தெரிவித்துள்ளார்.
இலங்கை அரச வங்கியான மக்கள் வங்கி, சீனத் தூதரகத்தால் கறுப்புப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளமை தொடர்பிலேயே பாலித ரங்கே பண்டார எம்.பி. ஊடகங்களிடம் இவ்வாறு கூறியுள்ளார்.
இந்த அரசை கொண்டு வருவதற்காக சீனாவின் ஒத்துழைப்பை வழங்கியதுடன், அதற்கு பிரதி உபகாரமாக இலங்கையில் தமக்குத் தேவையான இடங்களைப் பெற்றுக்கொள்ள அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், தற்போது சீனத் தூதரகம் மக்கள் வங்கியைக் கறுப்புப் பட்டியலில்
சேர்த்தமையானது சீன அரசு அல்லது சர்வதேசம், ராஜபக்ஷ அரசாங்கத்தை கறுப்புப்
பட்டியலில் சேர்ப்பதற்கு சமமானது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri
எங்களுக்கு சாதகமாக தான் நீதிமன்ற உத்தரவு, ரவி மோகன் இவ்வளவு கொடுக்கணும்: ஆர்த்தியின் அம்மா Cineulagam
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri