கடன் தொடர்பில் சீனா எடுத்த முடிவு - டொலரில் பெற்ற கடனை செலுத்த முடியாத நிலையில் இலங்கை!
சீனாவிடம் இருந்து கிடைக்க உள்ளதாக கூறப்படும் 1.5 பில்லியன் டொலர் கடனுதவியானது டொலரில் கிடைக்காது எனவும் அது சீனாவின் யுவான் நாணய மூலம் வழங்கப்படும் எனவும் இலங்கை மத்திய வங்கியின் முன்ன ஆளுநர்.கலாநிதி. டப்ளியூ.ஏ. விஜேவர்தன (W.A.Wijewardene) தெரிவித்துள்ளார்.
இதனால், இலங்கை பெற்றுக்கொண்டுள்ள டொலர் மூலமான கடன்களை செலுத்த இந்த பணத்தை பயன்படுத்த முடியாது. சீனாவில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்ய மாத்திரமே அதனை பயன்படுத்த முடியும்.
சுருக்கமாக கூறுவதாயின் இலங்கை, சீனாவிடம் இருந்து டொலர் மூலமே கடனை பெற்றுக்கொண்டுள்ளது. அந்த கடனை கூட திருப்பி செலுத்த இந்த பணத்தை பயன்படுத்த முடியாது எனவும் விஜேவர்தன குறிப்பிட்டுள்ளார்.
சீனாவிடம் இருந்து 1.5 பில்லியன் டொலர் கடனுதவி கிடைக்க உள்ளதாகவும் அப்போது நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு அதிகரிக்கும் எனவும் இதன் மூலம் நாடு எதிர்நோக்கியுள்ள நெருக்கடியான நிலைமை ஓரளவுக்கு சீராகி முன்னேற்றத்தை நோக்கி செல்ல முடியும் என எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.