வட சீனாவில் மண் சரிவு: 5 பேர் உயிரிழப்பு
வட சீனாவின் ஷாங்க்சி மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஏற்பட்ட மண் சரிவில் வீடு ஒன்று புதையுண்டதில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன் 3 பேர் காயமடைந்துள்ளனர் என சீனாவின் அரசு செய்தி நிறுவனமான சின்ஹுவா இன்று(25) செய்தி வெளியிட்டுள்ளது.
ஹாங்டோங் கவுண்டியில் உள்ள ஹாவோயி கிராமத்தில் ஏற்பட்ட இந்த மண் சரிவில் சிக்கிய 8 பேரும் மீட்கப்பட்டுள்ளதாக உள்ளூர் அவசரக்கால முகாமைத்துவ அலுவலகம் தெரிவித்துள்ளது.
எமது கடவுச்சீட்டிற்குப் பெரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது! ஒரு நாடாக நாம் முன்னோக்கி வருகிறோம் - அமைச்சர் நளிந்த
மண்சரிவில் சிக்கி ஐவர் உயிரிழப்பு
மீட்கப்பட்டவர்களில் 5 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதுடன் காயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சீரான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வெள்ளிக்கிழமை(24) மாலை 6:49 மணியளவில் ஏற்பட்ட இந்த மண் சரிவு வீட்டின் மீது விழுந்து அதை மூடியுள்ளது.

சம்பவ இடத்தில் பொலிஸார், தீயணைப்புப் படையினர் மற்றும் மருத்துவக் குழுவினர் உட்பட 550-க்கும் மேற்பட்ட மீட்புப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், லோடர்கள், கிரேன்கள், ட்ரோன்கள் மற்றும் உயிர் கண்டறியும் கருவிகள் உட்பட 130க்கும் மேற்பட்ட உபகரணங்கள் மீட்புப் பணியில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
நடிகர் ஜிபி முத்து மீது தாக்குதல்.. வீட்டின் முன் மாந்திரீக பூஜை, தட்டி கேட்டதால் தாக்குதல் Cineulagam
சனி–சூரியன் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்: இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! Manithan
தங்களின் சேமிப்புக் கணக்கில் குறைந்தது 1 மில்லியன் பவுண்டுகளுடன் 33,000 பிரித்தானியர்கள் News Lankasri