சீனாவின் நடவடிக்கை தொடர்பில் திபெத் ரைட்ஸ் கலெக்டிவ் அமைப்பு வெளியிட்டுள்ள தகவல்
கொழும்பை அதன் உத்திகளுக்கு விசுவாசமாக இருப்பதை உறுதி செய்யும் நடவடிக்கையில், தலாய் லாமாவின் எந்தவொரு சாத்தியமான பயணத்தையும் தடுக்குமாறு இலங்கையை சீனா அச்சுறுத்துகிறது என்று திபெத் ரைட்ஸ் கலெக்டிவ் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.
இலங்கையில் உள்ள சீனத் தூதரகத்தின் பொறுப்பாளர் ஹூ வெய், திபெத் தன்னாட்சிப் பிராந்தியம் உட்பட சீன அரசும் மக்களும் தலாய் லாமாவை, எந்த ஒரு வெளிநாடும் வரவேற்பதை கடுமையாக எதிர்க்கின்றனர் என்று கூறியுள்ளார்.
அண்மையில் புத்தகாயாவிற்கு புனித யாத்திரை மேற்கொண்டிருந்த இலங்கையின் உயர்மட்ட பௌத்த பிக்குகள் குழு, கடுமையான பொருளாதார நெருக்கடியில் உள்ள இலங்கைக்கு தலாய் லாமா வருகைத்தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
சீன கம்யூனிஸ்ட் கட்சியால் உருவாக்கப்பட்ட கதை
எனினும் 14ஆவது தலாய் லாமா ஒரு 'எளிய துறவி' அல்ல. ஒரு மத பிரமுகர் போல் மாறுவேடமிட்டு நீண்ட காலமாக சீனாவிற்கு எதிரான பிரிவினைவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு, சீனாவில் இருந்து திபெத்தை பிரிக்க முயற்சித்து வரும் அரசியல் ரீதியாக நாடுகடத்தப்பட்டவர் என்று சீனா கூறியுள்ளது.
எனினும் தனது தாயகம் ஆக்கிரமிக்கப்பட்டபோது நாடுகடத்தப்பட்ட 14ஆவது தலாய் லாமாவை ஒரு பிரிவினைவாதியாக சித்தரிப்பதற்காக சீன கம்யூனிஸ்ட் கட்சியால் உருவாக்கப்பட்ட கதை இது என்று திபெத் ரைட்ஸ் கலெக்டிவ் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.
சீனா புத்த மதத்தை முடுக்கியுள்ளது
பௌத்த தேசமாக இருக்கும் இலங்கைக்கு சீனா தனது புத்த மதத்தை முடுக்கியுள்ளது மற்றும் அதன் கடன்-பொறி இராஜதந்திரத்தின் கீழ் பீஜிங்கால் இந்த விடயம் குறிவைக்கப்படுகிறது என்றும் அந்த அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
இந்தநிலையில், கடன்-பொறி இராஜதந்திரத்தின் ஊடாக, நாடுகளை கடன் அடிமைத்தனத்தின் கீழ்; நேரடியாக சிக்க வைக்கும் சீனாவின் செயலுக்கு இலங்கையும் ஒரு உதாரணமாகும் என்றும் தீபெத் ரைட்ஸ் கெலக்டிவ் சுட்டிக்காட்டியுள்ளது.

பதினாறாவது மே பதினெட்டு 2 நாட்கள் முன்

புலம்பெயர்ந்தோரின் குடும்பங்களும் பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கப்படலாம்: அச்சம் தெரிவித்துள்ள விமர்சகர்கள் News Lankasri

கார் பிரச்சனையில் தப்பித்த முத்து-மீனாவிற்கு வந்த அடுத்த அதிர்ச்சி.. என்ன செய்வார்கள், சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
