அசுர வேகத்தில் இராணுவ கட்டமைப்பை பலப்படுத்தும் சீனா - அதிர்ச்சியில் உலக நாடுகள்
ஏவுகணை தொழில்நுட்பம், அணு ஆயுதங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றில் சீனா அதி வேகமாக முன்னேறி வருவதாக மேற்கத்தைய நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இராணுவ ஆற்றலின் அடிப்படையில் உலகளாவிய ரீதியில் ஒழுங்கமைக்கபட்டிருந்த கட்டமைப்பில் பாரிய மாற்றம் நடைபெற்று வருவதும் அதில் சீனா தந்து ஆதிக்கத்தை காண்பித்துக் கொண்டிருப்பதும் கண்கூடாகின்றது.

உளவுக்கப்பலை செலுத்தி முறுகல் நிலையை ஏற்படுத்திய சீனா
தாய்வான் மீதான அமெரிக்காவின் வருகையை கண்டித்து அமெரிக்க அரசுடனான அணைத்து தொடர்புகளை துண்டித்தமையும், அமெரிக்கா மற்றும் தாய்வானுக்கு எதிராக போர் ஒத்திகையில் ஈடுபட்டமையும் உலக நாடுகள் மத்தியில் சீனாவை பேசுபொருளாக்கியது.
இதற்கிடையில், இலங்கைக்கு உளவுக்கப்பலை செலுத்தி இந்தியாவுடனும் முறுகல் நிலையை ஏற்படுத்தியது.
இதனை ஆரம்பத்தில் மறைமுகமாக எதிர்த்த அமெரிக்கா இறுதியில் இந்தியாவுக்கு அதி நவீன தொழில்நுட்ப கருவிகளை வழங்கி சீனா மீதான எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தது.
வல்லரசான அமெரிக்கா, சீனாவின் பாதைகளில் காண்பிக்கும் எதிர்ப்புக்கள் அனைத்தும் சீனா இராணுவ ரீதியில் பலம் பெற்றுக்கொண்டு வருகின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவிற்கு ஆதரவாகியுள்ள ரஷ்யா
இதனிடையே புடின் மற்றும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் இருவரும் அமெரிக்காவுடன் போட்டி போட்டுக்கொண்டிருப்பதால், முன்னாள் கம்யூனிஸ்ட் போட்டியாளர்களுக்கு இடையே ஒரு மூலோபாய கூட்டுறவை வலுப்படுத்த வலுவான தனிப்பட்ட உறவுகளை உருவாக்கியுள்ளனர்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை விமர்சிக்க சீனா மறுத்துவிட்டது, நேட்டோ விரிவாக்கத்தை ஆதரிப்பதன் மூலமும் மொஸ்கோ மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பதன் மூலமும் அமெரிக்கா மோதலின் முக்கிய தூண்டுதல் என்று கூறியுள்ளது.
பதிலுக்கு, ரஷ்யா அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசியின் சமீபத்திய தாய்வான் பயணத்தால் அமெரிக்காவுடனான பதட்டங்களுக்கு மத்தியில் சீனாவை வலுவாக ஆதரித்துள்ளது.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், உக்ரைன் மற்றும் தாய்வானுக்கான அமெரிக்க ஆதரவை ஒப்பிட்டுப் பேசினார், இவை இரண்டும் உலகளாவிய உறுதியற்ற தன்மையைத் தூண்டுவதற்கான அமெரிக்க முயற்சிகளின் ஒரு பகுதியாகும் என்று கூறினார்.