சீனாவில் சிறுவர்களுக்கு விதிக்கப்படும் புதிய கட்டுப்பாடு
சீனாவின் சைபர்ஸ்பேஸ் (Cyber space) ஒழுங்குமுறை ஆணையம், 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் திறன்பேசிகள் (smartphones) பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்த பரிந்துரைத்துள்ளது.
அந்த பரிந்துரையின்படி, சீனாவின் சைபர்ஸ்பேஸ் நிர்வாகம், 16-18 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் திறன்பேசிகளின் பயன்பாட்டை ஒரு நாளைக்கு அதிகபட்சமாக இரண்டு மணிநேரம் வரை கட்டுப்படுத்தும் விதிகளை தயாரித்துள்ளது.
சீனாவால் முன்மொழியப்பட்ட விதிகளின்படி, 18 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு இரவு 10 மணி முதல் அதிகாலை 6 மணி வரையிலான நேரப்பகுதியில் திறன்பேசியை பாவிப்பது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
மேலும் 8 வயதுக்குட்பட்டவர்கள் ஒரு நாளைக்கு 8 நிமிடங்கள் வரை திறன்பேசிகளை பயன்படுத்தலாம் என தெரிவித்துள்ளது.
உற்பத்தி நிறுவனங்கள் சந்தித்துள்ள வீழ்ச்சி
இந்த உத்தேச சட்டத்தின் அறிவிப்புடன், பிரபல மென்பொருளான அலிபாபா(alibaba) மற்றும் வீடியோ பகிர்வு மென்பொருளான பிலிபிலி(Bilibili) போன்ற நிறுவனங்களின் பங்குகள் வீழ்ச்சியடைந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதுமட்டுமன்றி இதன் மூலம் சீனாவில் உள்ள பல கையடக்க தொலைபேசி மென்பொருள் உற்பத்தி நிறுவனங்களின் விற்பனை வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.
இந்த கட்டுப்பாடுகளை விதிக்க மைனர் மோட் (MINOR MODE) என்ற தனி மென்பொருளை அறிமுகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த முன்மொழிவுகள் தற்போது பொதுமக்களின் கருத்துக்காக வெளியிடப்பட்டுள்ளது. மேலும் குழந்தைகளின் திறன்பேசிகளை பெற்றோரின் திறன்பேசிகள் மூலம் இயக்கும் வசதியையும் அறிமுகப்படுத்தவுள்ளது.
அதிக நேரம் திறன்பேசிகளை உபயோகித்தால் உடல் பருமன், தூக்க பிரச்சனைகள் மற்றும் கவனக்குறைவு உள்ளிட்ட பல பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளதாகவும் சைபர்ஸ்பேஸ் (Cyber space) ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |