வலுக்கும் அமெரிக்கா - சீனா வர்த்தக மோதல்: ட்ரம்ப் அரசுக்கு மற்றுமொரு தடை
அமெரிக்காவுடன் வர்த்தக போர் வலுபெற்று உள்ள நிலையில், அந்நாட்டிடம் இருந்து போயிங் விமானங்களை வாங்க வேண்டாம் என தனது நாட்டு விமான நிறுவனங்களுக்கு சீனா தடை விதித்து உள்ளது.
அமெரிக்க ஜனாதிபதியாக கடந்த ஜனவரியில் பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப், இந்தியா, சீனா உட்பட பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு பரஸ்பர வரியை உயர்த்தி உத்தரவிட்டார்.
குறிப்பாக சீனாவில் இருந்து இறக்குதி செய்யப்படும்.பொருட்களுக்கு, 145 சதவீதம் வரி விதிக்கப்பட்டது.
வரிவிதிப்புக்கு சவால்
இந்த வரிவிதிப்புக்கு சவால் விடுத்த சீனா, அமெரிக்கா மீது 125 சதவீத வரி விதித்தது.
இந்நிலையில் அனைத்து நாடுகளின் மீது பிறப்பிக்கப்பட்ட வரி விதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்தி வைத்த அமெரிக்கா, சீனா மீதான வரி விதிப்பை மட்டும் அமல்படுத்தியுள்ளது.
இது, இரு நாடுகளுக்கும் இடையிலான வரிப் போரை அதிகரித்துள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவில் தயாரிக்கப்படும் போயிங் நிறுவனத்திடம் இருந்து விமானங்களை வாங்க வேண்டாம் என, தனது நாட்டு விமான நிறுவனங்களுக்கு சீனா உத்தரவிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், அமெரிக்க நிறுவனங்களிடம் இருந்து விமானம் தொடர்பான சாதனங்கள் மற்றும் கருவிகளை வாங்க வேண்டாம் எனவும் உத்தரவிட்டு உள்ளது.

யார் இருக்கிறார்கள் அங்கே... இந்தியாவில் 35 ஆண்டுகளாக வசிக்கும் பாகிஸ்தானிய பெண்மணி உருக்கம் News Lankasri

CSK மேட்ச் பார்க்க வந்தபோது அஜித் அணிந்துவந்த வாட்ச் விலை எவ்வளவு தெரியுமா?.. இத்தனை லட்சமா? Cineulagam
