பிபின் ராவத் மரணத்தில் மறைமுக சூழ்ச்சியில் சீனா! பிரபல ஆய்வாளரின் கருத்து கணிப்பு வெளியானது
தமிழகம் குன்னூரில் நிகழ்ந்த இராணுவ ஹெலிகொப்டர் விபத்தில் இந்திய முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று முன்தினம் மதியம் இந்த விபத்து இடம்பெற்றிருந்தது. இதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில்,இந்திய முப்படை தளபதி ஹெலிகொப்டர் விபத்தில் பலியானதையும், கடந்த வருடம் தாய்வானின் முப்படை தளபதி ஹெலிகொப்டர் விபத்தில் பலியானதையும் ஒப்பிட்டு டுவிட்டரில் பல்வேறு மாறுபட்ட கருத்துக்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன.
லடாக்கில் காணப்படும் பதற்ற நிலை காரணமாக இந்த ஹெலிகொப்டர் விபத்தின் பின்னணியில் சீனா மறைமுகமாக செயற்பட்டிருக்கலாம் என தாய்வானில் கடந்த வருடம் இடம்பெற்ற சம்பவத்தை சுட்டிக்காட்டியுள்ளனர்.
கடந்த வருடம் தாய்வானின் முப்படை தளபதி சென் யி மிங்கும் பல முக்கிய இராணுவதளபதிகளும் பயணம் செய்துகொண்டிருந்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில் அனைவரும் உயிரிழந்திருந்தனர்.
இந்நிலையில், இந்திய முப்படை தளபதியும், தாய்வானின் முப்படைகளின் பிரதானியும் ஹெலிகொப்டர் விபத்தில் கொல்லப்பட்டமையை ஒப்பிட்டு புவி மூலோபாய நிபுணர் பிரம்ம செல்லானே கருத்தொன்றையும் பதிவிட்டுள்ளார்.
அவர் தனது பதிவில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
ஜெனரல் ராவத்தின் மரணத்திற்கும் 2020 இல் தாய்வானின் முப்படைகளின் பிரதானி ஜெனரல் சென் யி மிங் உட்பட பல முக்கிய அதிகாரிகள் ஹெலிகொப்டர் விபத்தில் கொல்லப்பட்டமைக்கும் இடையில் தொடர்பு காணப்படுகின்றது.
ஒவ்வொரு ஹெலிக்கொப்டர் விபத்தும் சீனா இராணுவத்தின் ஆக்கிரமிப்பிற்கு எதிரான தற்பாதுகாப்பு நடவடிக்கையில் முக்கியமானவராக காணப்பட்டவரை அகற்றியுள்ளது.
எனினும் இந்த இரு விபத்துக்களிற்கும் இடையில் தொடர்பில்லை,ஆச்சரியமான சமாந்திரம் காணப்பட்டாலும் இந்த இரு விபத்துகளிற்கும் இடையில் தொடர்பில்லை,மேலும் வெளி சக்தி தொடர்புபட்டிருக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்.....
எம்.ஐ.17வி-5 ஹெலிகொப்டர் விபத்தின் இறுதி தருணம்! - காணொளி வெளியானது
இயந்திர கோளாறா? தீவிரவாதிகளின் சதியா? - முடுக்கிவிடப்பட்ட விசாரணை! ஆராயப்படும் கருப்புப்பெட்டி

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri
