இலங்கை கடற்பரப்பில் சீனா - இந்தியா விரைவில் நேரடிப்போர்
சீனா இந்து சமுத்திரத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டால் கடற்பரப்பில் விரைவில் நேரடிப்போரொன்று இடம்பெறும் என பிரித்தானியாவில் இருக்க கூடிய அரசியல் ஆய்வாளர் திபாகரன் தெரிவித்துள்ளார்.
இலங்கை மீதான சீனாவின் ஆக்கிரமிப்பு அவை ஏனைய நாடுகளுக்கு ஏற்படுத்தக்கூடிய நெருக்கடி தொடர்பில் எமது ஊடறுப்பு நிகழ்ச்சிக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
கொக்வைலன்,அம்பாந்தோட்டை, குவாதர் ஆகிய மூன்று துறைமுகங்களையும் இணைத்தால் வருகின்ற எல்லைக்கோடு இந்தியாவை இந்து சமுத்திரத்திற்குள் முடக்கிவிட்டது.
இந்த சுற்றி வளைப்பு இறுக்கமடையும் போது இந்தியாவிற்கு மூச்சு விட முடியாத அளவிற்கு நெருக்கடியாக அமைந்துவிடும்.
இந்தியாவின் வாழ்வும், பொருளாதாரமும் இந்து சமுத்திரத்திலேயே தங்கியுள்ளது.எனவே இந்தியா உயிர் வாழ்வதற்கு இந்து சமுத்திரத்தின் போக்குவரத்து மிக அவசியம்.
எனவே சீனா இந்து சமுத்திரத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தால் இந்தியாவிற்கு ஆதரவாக மேற்குலக நாடுகள் இந்த போரினை நடத்துவதற்கான வாய்ப்புக்களை உருவாக்கும்.
இதற்கு இந்தியா தன்னை காப்பாற்றி கொள்வதற்காக கட்டாயமாக போராடியே ஆக வேண்டும்.இந்த போராட்டத்திற்கு அமெரிக்கா தனது முழு ஆதரவினையும் வழங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
புதிய கார் வாங்கியுள்ள அய்யனார் துணை சீரியல் நடிகர் பாண்டியன்... மனைவியுடன் வெளியிட்ட வீடியோ இதோ Cineulagam