செயற்கை சூரியனை உருவாக்கியுள்ள சீனா
செயற்கை சூரியன் (Artificial Sun) என்று அழைக்கப்படும் சுமார் 10 கோடி செல்சியஸ் வெப்பத்தில் இருக்கக்கூடிய பரிசோதனை முறையைச் சீனா வெற்றிகரமாக முடித்துள்ளது.
இந்த முறைமை எதிர்காலத்தில் மின் உற்பத்தியை மொத்தமாக மாற்றக்கூடியதாகப் பார்க்கப்படும் என சீனா தெரிவித்துள்ளது.
மின்சார தேவை தொடர்ந்து அதிகரிப்பு
மின்சார தேவை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அதிலும் தற்போது மின்சார வாகனங்கள், ஸ்மார்ட் கருவிகள் வந்துவிட்டதால் மின் தேவை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வேகமாக அதிகரித்து வருகிறது.

இதனை ஈடுசெய்ய மின் உற்பத்தியை அதிகரிக்கவும் சர்வதேச அளவில் ஆய்வாளர்கள் பல்வேறு ஆய்வுகளை நடத்தி வருகிறார்கள்.
இதன்படி சீனா மின்சாரத்தை நியூக்ளியர் ஃப்யூஷன் முறையில் உருவாக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது.
1,000 வினாடிகள் நீடிப்பு
அதன் ஒரு பகுதியாகச் சீனா அணுக்கரு இணைவு (nuclear fusion) பரிசோதனையை வெற்றிகரமாக நடத்தியது. இதை ஆய்வாளர்கள் 'செயற்கை சூரியன்' என்று அழைக்கிறார்கள்.

இந்த ஃப்யூஷன் எனர்ஜி ரியாக்டரில் உருவான பிளாஸ்மா சுமார் 1,000 வினாடிகள் நீடித்ததாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த 2023இல் சீன ஆய்வாளர்கள் இதுபோன்ற ஆய்வை நடத்திய போது பிளாஸ்மா 403 வினாடிகள் இருந்த நிலையில், தற்போது அதை முறியடித்து சுமார் 1000 நொடிகள் பிளாஸ்மா நீடித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri
மூன்றாம் உலகப்போர் வெடித்தால் சேமித்துவைக்கவேண்டிய 9 உணவுகள்: பிரித்தானிய நிறுவனம் ஆலோசனை News Lankasri