தூண்களுக்கு மேல் நிர்மாணிக்கப்படும் அதிவேக வீதியை நிர்மாணிக்கும் பொறுப்பு சைனா ஹாபர் நிறுவனத்திற்கு
அத்துருகிரிய அனைத்து இணைப்பு வீதிகள் மற்றும் களனி பலத்தை இணைக்கும் தூண்களுக்கு மேல் நிர்மாணிக்கப்படும் அதிவேக வீதியை நிர்மாணிக்கும் திட்டத்தை சைனா ஹாபர் கோபரேஷன் நிறுவனத்திற்கு வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
பெருந்தெருக்கள் துறை அமைச்சர் இந்த யோசனையை அமைச்சரவையில் சமர்பித்துள்ளார்.
இந்த அதிவேக வீதியை நிர்மாணித்து அதனை சிறிது காலம் முகாமைத்துவம் செய்த பின்னர், அரசாங்கத்திடம் கையளிக்கப்படவுள்ளது.
இதற்கான அனுமதியை அமைச்சரவை கடந்த 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் 8 ஆம் திகதி வழங்கி இருந்தது.
இலங்கையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள துறைமுக நகர நிலம், ஹம்பாந்தோட்டை துறைமுகம் உட்பட முக்கிய அபிவிருத்தித் திட்டங்களை சைனா ஹாபர் கோபரேஷன் நிறுவனமே நிர்மாணித்து வந்துள்ளது.