பொலிஸாரின் அத்துமீறலை கண்டித்து மனித உரிமை ஆணைக்குழுவில் பரபரப்பு முறைப்பாடு
திருகோணமலை - முத்து நகர் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என்றும் சீனக்குடா பொலிஸாரின் அத்துமீறல்கள் அதிகரித்து விட்டது என்றும் கொழும்பில் உள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் முத்து நகர் ஒன்றிணைந்த விவசாய சங்கத்தின் செயலாளர் சஹீலா சபூர்தீன் கருத்து தெரிவிக்கையில்,
முத்து நகர் விவசாயிகளின் காணிகள் சூரிய மின் சக்தி உற்பத்திக்காக கையகப்படுத்தப்பட்டதையடுத்து விவசாயிகள் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
சீனக்குடா பொலிஸாரின் அத்துமீறல்
இதற்காக மாற்றுக்காணி வழங்குவதாக கூறினார்கள், ஆனால் இதுவரையில் அதற்கான தீர்வை அப்பகுதி விவசாயிகளுக்கு கொடுக்கவில்லை. மாறாக, எங்களது விவசாய நிலம் இலங்கை துறைமுக அதிகார சபையினால் கையகப்படுத்தி 342விவசாய குடும்பங்களை வீதிக்கு இறங்கியுள்ளனர்.

தற்போது தொழிலின்றி பாரிய பொருளாதார சிக்கலை அப்பகுதியில் வாழும் விவசாயிகள் எதிர்கொண்டு வருகின்றனர்.
மேலும், இரவு நேரத்தில் சீனக்குடா பொலிஸார் தங்கள் விவசாய குடும்பம் ஒன்றின் வீட்டினுள் நுழைந்து அப்பட்டமாக வீட்டை பரிசோதனை செய்துள்ளனர்.
இது அடிப்படை உரிமை மீறலாகும், இது தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு அறிந்துள்ளோம் என்றார்.
விசேட வைத்திய நிபுணர்கள் கட்டணங்களில் ஏற்பட்டுள்ள பாரிய அதிகரிப்பு! வைத்திய நிபுணர் முன்வைக்கும் குற்றச்சாட்டு
TRP-ல் மட்டுமில்லை, இதிலும் அய்யனார் துணை தான் நம்பர் 1, அடுத்தடுத்து எந்த சீரியல்கள் உள்ளன தெரியுமா Cineulagam
பாக்கியராஜின் மறைவு... குஷ்பு கணவருடன் வெளியிட்ட புகைப்படம்! விளாசிய நெட்டிசனுக்கு குஷ்புவின் பதில் Manithan
50 கிலோ விஷம், 30,000 காப்ஸ்யூல்கள்: 15,000 பேரை கொல்ல சதித்திட்டம்: பயாஸ் பிரேம்ஜி கைது News Lankasri