நரேந்திர மோடிக்கு எதிர்பார்க்கப்பட்ட வாழ்த்து தெரிவித்த சீனா
இந்தியாவில் மூன்றாவது முறையாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் நரேந்திர மோடிக்கு சீனப் பிரதமர் லீ கியாங்( Li Qiang) வாழ்த்து தெரிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இருதரப்பு உறவுகளை சரியான திசையில் முன்னோக்கி எடுத்து சென்று, புதுடில்லியுடன் ஒத்துழைக்க பீஜிங்கின் விருப்பத்தை லி இந்த செய்தியில் வெளிப்படுத்தியுள்ளார்.
இருதரப்பு உறவு
சீனா-இந்தியா உறவுகளின் உறுதியான மற்றும் நிலையான வளர்ச்சி இரு நாட்டு மக்களுக்கும், பிராந்திய மற்றும் உலகளாவிய ஸ்திரத்தன்மைக்கும் பங்களிக்கும் என்றும் இந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த 5ஆம் திகதியன்று சீன வெளியுறவு அமைச்சகம் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்திருந்தது.
இந்நிலையில், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கல்வான் சம்பவத்திற்குப் பின் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது இரண்டு நாடுகளின் எதிர்காலத்திற்கும் அவசியம் என்று அமைச்சகம் அந்த செய்தியில் வலியுறுத்தியிருந்தது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |