அமெரிக்காவை தோற்கடித்து இந்தியாவுடன் நெருக்கத்தை அதிகரிக்கும் சீனா
அமெரிக்காவை(US) தோற்கடித்து இந்தியாவுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக்கொண்ட சீனா(China) , 2023-24 நிதியாண்டில் இந்தியாவின்(India) மிகப்பெரிய வர்த்தக பங்காளியாக உருவெடுத்துள்ளதாக சர்வதேச வள்ளுனர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
118.4 பில்லியன் டொலர் என்ற இருவழி வர்த்தகத்துடன் அமெரிக்காவை குறுகிய வித்தியாசத்தில் சீனா தோற்கடித்துள்ளது.
பொருளாதார சிந்தனைக் குழுவான ஜிடிஆர்ஐயின் (Global Trade Research Initiative) தரவுகள் இதனை வெளிப்படுத்தியுள்ளன.
இருதரப்பு வர்த்தகம்
இதன்படி 2023-24இல் இந்தியாவிற்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் பரிமாற்றம் 118.3 பில்லியன் டொலராக காணப்பட்டுள்ளது.
முன்னதாக 2021-22 மற்றும் 2022-23 ஆண்டுகளில் அமெரிக்கா, இந்தியாவின் சிறந்த வர்த்தக பங்காளியாக இருந்தது என்று டைம்ஸ் ஒஃப் இந்தியா தெரிவித்துள்ளது.
ஜிடிஆர்ஐயின் அறிக்கைபடி, கடந்த நிதியாண்டில் சீனாவுக்கான இந்தியாவின் ஏற்றுமதி 8.7 சதவீதம் அதிகரித்து 16.67 பில்லியன் டொலர்களாக உயர்ந்தது.
இதன்படி சீனாவுக்கான ஏற்றுமதியில் இரும்புத் தாது, பருத்தி நூல்-துணிகள், கைத்தறி, மசாலாப் பொருட்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள், பிளாஸ்டிக் மற்றும் லினோலியம் ஆகியவை அடங்கியிருந்தன.
இதேவேளை சீனாவில் இருந்து இறக்குமதி 3.24 சதவீதம் அதிகரித்து 101.7 பில்லியன் டொலர்களாக உயர்ந்தது என்று ஜிடிஆர்ஐ தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |