மீண்டும் அச்சுறுத்தும் கோவிட்! உலக நாடுகளின் தீர்மானத்திற்கு சீனா கண்டனம்- பிரித்தானியா வெளியிட்ட அறிவிப்பு
சீனாவில் கோவிட் பரவல் அதிகரித்து வரும் சூழ்நிலையில் அந்நாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கு பல்வேறு நாடுகள் கட்டுப்பாடு விதித்துள்ளது.
சீனாவில் கடந்த சில நாட்களாக கோவிட் உச்சத்தில் இருந்து வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கானோருக்கு கோவிட் பாதிப்பு ஏற்பட்டுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒமிக்ரோன்
ஒமிக்ரோன் வைரசின் பிஎப்.7 வகை திரிபு சீனாவில் அதிக தாக்கத்தை ஏற்படுத்திய் வருகிறது.
இதனை தொடர்ந்து சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கோவிட் பரிசோதனை, நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயமானது அமெரிக்கா, கனடா, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் என கட்டுப்பாடு விதித்துள்ளது.
சீன பயணிகளுக்கு இங்கிலாந்தும் கட்டுபாடு விதித்து இருந்தது.
சீனாவில் இருந்து இங்கிலாந்து வரும் பயணிகள் புறப்படுவதற்கு 2 நாட்களுக்கு முன்னர் பரிசோதனை எடுக்கப்பட்ட, அதில் கோவிட் பாதிப்பு இல்லை என்ற சான்றிதழுடன் வர வேண்டும் என்று கடந்த வாரம் இங்கிலாந்து அரசு தெரிவித்து இருந்தது.
கோவிட் பரிசோதனை
இந்த நிலையில் சீனாவில் இருந்து இங்கிலாந்து வரும் பயணிகள், கோவிட் பரிசோதனை சான்றிதழுடன் வர வேண்டும் என்ற உத்தரவு திரும்ப பெறப்பட்டுள்ளது.
ஹீத்ரோ விமான நிலையத்தில் பயணிகள் தானாக முன்வந்து கோவிட் பரிசோதனை செய்து கொள்ளலாம் என்றும் கோவிட் உறுதியானாலும் அவர்கள் தனிமைப்படுத்தப்பட மாட்டார்கள் அல்லது சுயமாக தனிமைப்படுத்த உத்தரவிடப்பட மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீன பயணிகளுக்கு இந்தியா உட்பட பல நாடுகள் கட்டுப்பாடுகள் விதித்து உள்ள நிலையில், அவர்கள் கோவிட் பரிசோதனை எடுக்க தேவையில்லை என்று இங்கிலாந்து அரசு கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், சீனாவில் இருந்து வரும் பயணிகளை கண்காணிக்கவும் பல்வேறு நாடுகள் முடிவு செய்துள்ளது. இந்நிலையில், தங்கள் நாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கு கோவிட் பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளதற்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சீன வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் மாவொ நிங் கூறுகையில், தங்கள் நாட்டிற்குள் நுழைய சீன பயணிகளை மட்டும் குறிவைத்து சில நாடுகள் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.
இது அறிவியல் ஆதாரப்பூர்வமற்றது. இந்த நடைமுறையை ஏற்றுக்கொள்ள முடியாது. பரஸ்பர கொள்கையின் அடிப்படையில் சீனா எதிர் நடவடிக்கைகளை எடுக்க முடியும்' என்றார்.