ட்ரம்பின் பரஸ்பர வரி விதிப்பு: ஐரோப்பாவுக்கு அழைப்பு விடுத்த சீனா
டொனால்ட் ட்ரம்பின்(Donald Trump) பரஸ்பர வரி விதிப்புகளுக்கு எதிராக ஒருங்கிணைய வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியத்திற்கு சீனா(China) அழைப்பு விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் உடனான சந்திப்பின் போதே சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், ஐரோப்பாவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

வீழ்ந்து வெடித்தால் காதுகளிலும் கண்களிலும் இரத்தம் வடியும்! ஈரானை அச்சப்படுத்தும் அமெரிக்காவின் அதிசயக் குண்டு!
சீனா அழைப்பு
இறக்குமதி செய்யப்படும் சீனப் பொருட்களுக்கு ஜனாதிபதி ட்ரம்ப் 145 சதவீத வரி விதித்துள்ளார்.
ஆனால் ஐரோப்பிய ஒன்றியம் மீது விதிக்கப்பட்ட 20 சதவீத வரி விதிப்பானது 90 நாட்களுக்கு இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்கா தொடர்ந்து பொறுப்பற்ற முறையில் செயல்பட்டால், வர்த்தகப் போரை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் சீனா தெரிவித்துள்ளது.
சீனாவும் இந்தியாவும் இனி ஒன்றாக செயல்பட முடிவு செய்துள்ள நிலையில், தற்போது ஐரோப்பாவுக்கு சீனா அழைப்பு விடுத்துள்ளது.