சீனாவில் 50 கிலோவுக்கு குறைவான எடை கொண்டவர்கள் வீட்டை விட்டு வெளியேற தடை..!
சீனாவில்(China) வசிக்கும் மக்களில் 50 கிலோவுக்கு குறைவான எடை கொண்ட மக்கள் தங்களின் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது.
சீனாவில் சூறைக்காற்று என்பது அதிவேகமாக வீச தொடங்கி உள்ளது.
சீனாவில் சூறைக்காற்று
சீனாவின் பீஜிங், தியான்ஜின், ஹெபெய் மாகாணங்களில் சூறைக்காற்று பலமாக வீசி வருகிறது. இந்த காற்றில் பேனர்கள் தூக்கி வீசப்படுகின்றன. மரங்கள், மின்கம்பங்கள் முறிந்து விழுகின்றன. பல வீடுகள் சேதமடைந்துள்ளன.
நேற்று முன்தினம் முதல் வீச தொடங்கிய இந்த சூறைக்காற்று இன்று வரை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சூறைக்காற்று காரணமாக பெய்ஜிங்கில் விளையாட்டு போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. தலைநகர் பெய்ஜிங் உள்பட பல மாகாணங்களில் பூங்காக்கள் மூடப்பட்டுள்ளது. தொடருந்து மற்றும் விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளது.
50 கிலோவுக்கு குறைவான எடை உள்ளவர்கள்
இப்படியான சூழலில் பொதுமக்கள் யாரும் தேவையின்றி வெளியே நடமாட வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி பல வடக்கு மாகாணங்களில் 50 கிலோவுக்கு குறைவான எடை உள்ளவர்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டும்.
ஏனென்றால் மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசும் இது 50 கிலோவுக்கு குறைவான மக்களை தூக்கி செல்லும். எனவே பொதுமக்கள் பத்திரமாக வீடுகளில் இருக்க வேண்டும் என்று சீனா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆலங்கட்டி மழை
அத்தோடு சீனாவில் நேற்று முதல் அடுத்த 24 மணிநேரத்தில் சீனாவின் வெப்பநிலை என்பது 14 டிகிரி செல்சியஸ் வரை குறைய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
இதனால் சூறைக்காற்றுக்கான ஓரஞ்சு அலர்ட் என்பது சீனாவுக்கு விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் மங்கோலியா மற்றும் வடகிழக்கு சீனாவின் சில பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு எதிர்பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமின்றி தெற்கு சீனாவில் இந்த முறை ஆலங்கட்டி மழை என்பது கடுமையாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |