தயார் நிலையில் நீண்ட பட்டியல்: சிக்கப் போகும் அரசியல்வாதிகள்
வாகனங்களை இறக்குமதி செய்து அவற்றை பதிவு செய்யாமல் பயன்படுத்திய பட்டியலொன்றை விரைவில் வெளியிடவுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க(Anura Kumara Dissanayaka) தெரிவித்துள்ளார்.
கந்தளாய் நகரில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த காலங்களில் வாகன இறக்குமதி தடைசெய்யப்பட்டிருந்த போதிலும் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களில் பலர் வாகனங்களைக் கொண்டுவந்தனர்.
சட்டம் நடைமுறை
அவர்கள் அத்தகைய வாகனங்களைப் பதிவுசெய்யாமல் பயன்படுத்தினர். அதிகாரத்தில் இருந்தவர்கள் சட்டத்துக்குக் கட்டுப்படவில்லை. ஏனையோருக்கே சட்டம் உரித்தானது என அவர்கள் செயற்பட்டனர்.
எனவே, அவ்வாறு சட்டவிரோதமாக வாகனங்களைப் பயன்படுத்திய சிலர் விரைவில் கைது செய்யப்படவுள்ளனர். அவ்வாறானவர்களின் பெயர்கள் அடங்கிய நீண்ட பட்டியலொன்று உள்ளது.
இது அரசியல் பழிவாங்கல் அல்ல, நாம் சட்டத்தை முறையாக செயற்படுத்துகிறோம் என்பதையே இது காட்டுகிறது என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |