தென் சீனக் கடலில் அதிகரித்துள்ள பதற்றம்: பிலிப்பைன்ஸ் வீரர்களை தாக்கிய சீனா
தென் சீனக் கடலில் ஜூன் 17ஆம் திகதி நடந்த மோதலின் போது கோடாரி மற்றும் கூரிய ஆயுதங்களால் சீனா தாக்குதல் நடத்தியமை தொடர்பாக பிலிப்பைன்ஸ் நேற்று(20) காணொளிகளை வெளியிட்டுள்ளது.
அவற்றில், சீன கடலோர பாதுகாப்பு படையினர் கையில் ஆயுதங்களை ஏந்தியபடி பிலிப்பைன்ஸ் ராணுவ வீரர்களை மிரட்டுவதும், பிலிப்பைன்ஸின் படகுகளை தாக்கியதும் பதிவாகியுள்ளது.
கண்ணீர்ப்புகைக் குண்டுகள்
பிலிப்பைன்ஸ் இராணுவ அதிகாரிகள், சீன கடலோர பாதுகாப்பு படை அதிகாரிகள் தங்கள் படகில் சட்டவிரோதமாக ஏறி, அவர்களிடமிருந்த ஆயுதங்களையும், துப்பாக்கிகளையும் கொள்ளையடித்ததாக தெரிவித்துள்ளனர்.
மேலும், சீன அதிகாரிகள் கப்பலின் வெளிப்புற மோட்டார் மற்றும் Navigation கருவிகளை அழித்துள்ளதோடு பிலிப்பைன்ஸ் இராணுவ வீரர்களின் கையடக்க தொலைபேசிகளையும் பறித்துச் சென்றதாக கூறியுள்ளனர்.
The CCG launched a brutal assault on the AFP personnel aboard an AFP Rigid Hull Inflatable Boat (RHIB), aggressively ramming it and brandishing bladed and pointed weapons, explicitly threatening to harm AFP troops. pic.twitter.com/LuFgLE3WJj
— Armed Forces of the Philippines (@TeamAFP) June 19, 2024
சீன அதிகாரிகள் தங்கள் படகை கூர்மையான ஆயுதங்களால் துளைத்ததாக பிலிப்பைன்ஸின் ஆயுதப்படை தளபதி அல்போன்சோ டோரஸ் கூறியுள்ளார்.மேலும், பிலிப்பைன்ஸ் கடற்படையைச் சேர்ந்த ஒருவரின் கட்டை விரலும் துண்டிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சீனக் கடலோரக் பாதுகாப்பு படையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசி கொள்ளையடித்ததாகவும், சீனாவின் இந்த நடவடிக்கைகள் கடற்கொள்ளையர் போன்றது என பிலிப்பைன்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நிலவி வரும் பதற்றம்
தென் சீனக் கடலில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட சீனா புதிய கடல்சார் சட்டத்தை இயற்றியுள்ளது. இது கடந்த சனிக்கிழமை நடைமுறைப்படுத்தப்பட்டது. உண்மையில், தென் சீனக் கடல் முழுவதையும் சீனா தனது பகுதியாகக் கோருகிறது.
The CCG swarmed AFP's Rigid Hull Inflatable Boats (RHIBs) already moored alongside BRP Sierra Madre (LS57), escalating their aggression by wielding pointed weapons and explicitly threatening to harm Filipino troops. pic.twitter.com/huEPCBXPah
— Armed Forces of the Philippines (@TeamAFP) June 19, 2024
அதேசமயம் பிலிப்பைன்ஸ், வியட்நாம், இந்தோனேஷியா போன்ற தெற்காசியாவின் பல நாடுகளும் உரிமை கோருகின்றன. தென் சீனக் கடலில் நிலவும் சர்ச்சையைக் கருத்தில் கொண்டு சீனப் படகுகள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளன.
கடந்த சில ஆண்டுகளாக, பிலிப்பைன்ஸ் மற்றும் சீனாவின் கப்பல்கள் இப்பகுதியில் இருப்பது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |