இலங்கையிலிருந்து மீன் உற்பத்திகளை இறக்குமதி செய்ய சீனா அனுமதி
இலங்கையிலிருந்து மீன் உற்பத்திகளை இறக்குமதி செய்வதற்கு சீனா அனுமதி வழங்கியுள்ளது.
சீன சுங்கப் பிரிவினால் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சீனாவிற்கான இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.
இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மீன் உற்பத்திகளுக்கு சுகாதார தரச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜூலை மாதம் முதல் இவ்வாறு மீன் உற்பத்திகளை இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையிலிருந்து மீன் உற்பத்திகளை ஏற்றுமதி செய்வோருக்கு சீனாவிற்கான இலங்கைத் தூதரகம் உதவிகளை வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை தொடர்ச்சியாக பெற்றுக்கொள்வதில் சவால்கள் நீடிப்பதாக அண்மையில் தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், சீனா இலங்கையின் மீன் உற்பத்திகளை கொள்வனவு செய்ய இணங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.