இலங்கைக்கு எரிபொருள் விநியோகம் செய்ய சீனா இணக்கம்
இலங்கைக்கு எரிபொருள் விநியோகம் செய்ய சீன அரசாங்கம் இணக்கம் வெளியிட்டுள்ளது. ஸ்திரமான எரிபொருள் விநியோகச் சங்கிலியை பேணுவதற்கு சீனா, இலங்கைக்கு உதவ முன்வந்துள்ளது.
இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளைப் போன்றே சீனாவிடமும் இலங்கை எரிபொருள் கோரியிருந்தது.
போதியளவு எரிபொருட்களை பெற்றுக் கொள்வதில் இலங்கை அரசாங்கம் எதிர்நோக்கும் நெருக்கடிகளைக் கருத்திற் கொண்டு இலங்கைக்கு உதவ முன்வந்துள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.

இலங்கைக்கான சீன தூதுவர் ஸீ ஸென்ஹோங் இந்த விடயத்தை அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளார்.
சீனாவிடமிருந்து கிடைக்கப் பெறும் எரிபொருள் இந்த மாத நடுப் பகுதியில் இலங்கையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஈரான், அமெரிக்க இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக எரிபொருள் விநியோகம் தொடர்பில் கடும் நெருக்கடி நிலைமை தொடர்ந்து வரும் பின்னணியில் சீனா இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
100 வருட பழமையான வீட்டில் மறைந்திருந்த பணக் குவியல்- அதிர்ச்சியடைந்த பிரித்தானிய தம்பதி News Lankasri
அமைதி பேச்சுவார்த்தைக்கு வழிவிட்ட டிரம்ப்: ஈரான் - அமெரிக்கா இடையே தற்காலிக தாக்குதல் நிறுத்தம் News Lankasri