“சீனாவிடம் இருந்து ரஷ்யாவுக்கு ஆயுத உதவி” -அமெரிக்காவின் பொய்!- குற்றம் சுமத்தும் சீனா!
உக்ரைனில் இராணுவ உதவியை வழங்குமாறு தமது நாட்டிடம் சீனா கோரியதாக அமெரிக்க அதிகாரிகள் கூறியிருந்தமையை சீன மறுத்துள்ளது.
இது தவறான தகவல் என்று சீனா கூறியுள்ளது. பெயர் குறிப்பிட்டாத சில அமெரிக்க அதிகாரிகள், அமெரிக்காவின் செய்தி நிறுவனங்களுக்கு, ரஷ்யா, சீனாவிடம் உதவியை கோரிய தகவலை வழங்கியிருந்தனர்.
இதனையடுத்து மொஸ்கோவை ஆதரித்தால் கடுமையான "விளைவுகளை" எதிர்கொள்ள நேரிடும் என்று பீய்ஜிங்கை, அமெரிக்கா எச்சரிப்பதற்கு வழியை ஏற்படுத்தியிருந்தது..
எனினும் சீன தலைநகர் பீய்ஜிங்கில் ஒரு செய்தியாளர் சந்திப்பின் உரையாற்றிய சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர், போரில் சீனாவின் பங்கு பற்றி "தீங்கிழைக்கும்" பொய்களை வோஷிங்டன் பரப்புவதாக குற்றம் சுமத்தினார்.
சீனா "அமைதியை வலியுறுத்துவதிலும், பேச்சுவார்த்தைகளுக்கு அழைப்பு விடுப்பதிலும் ஆக்கபூர்வமான பங்கைக் கொண்டுள்ளது என்று வலியுறுத்தினார்.
இதற்கிடையில் ரஷ்யாவிற்கு எதிரான போராட்டத்தில் மேற்கத்திய நாடுகள் தமக்கு கூடுதல் உதவிகளை வழங்குமாறு உக்ரைன் மீண்டும் கோரியுள்ளது.
“உக்ரைன் வெற்றிகரமாகப் போராடுகிறது,"
எனவே எங்களுக்குத் தேவையான அனைத்து ஆயுதங்களையும் வழங்குங்கள்”என்று உக்ரைன் வெளியுறவு அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
"ரஷ்யா மீது கூடுதல் பொருளாதாரத் தடைகளைப் பிரயோகித்து, அதை முழுவதுமாகத் தனிமைப்படுத்துங்கள்"
”புடினைத் தோல்வியடையச் செய்ய உதவுங்கள், இதன் மூலம் நீங்கள் மூன்றாம் உலகப் போரைத் தவிர்க்கலாம்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை பொருளாதாரத் தடைகள் மூலம் ரஷ்யாவை "செயற்கை வீழ்ச்சி நிலைக்கு செல்வதை வெளிநாட்டு விரும்புவதாக ரஷ்யாவின் நிதி அமைச்சர் குற்றம் சுமத்தியுள்ளார்.
ரஷ்யாவின் நிதியமைச்சர் என்டன் சிலுவானோவ் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
ரஷ்ய அரசாங்கத்தின் வெளிநாட்டு நாணயக் கணக்குகளை முடக்குவது, உண்மையான பொருளாதார அடிப்படைகள் இல்லாத ஒரு செயற்கையான பொருளாதார வீழ்ச்சிநிலையை கொண்டு வரும் முயற்சியாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 13 மணி நேரம் முன்
ஹார்முஸ் முற்றுகையைக் கைவிடுங்கள்... ஈரானின் அதிரடி நகர்வால் ட்ரம்பிடம் கெஞ்சும் சவுதி அரேபியா News Lankasri
6 மாதம் தள்ளிப்போன விவாகரத்து வழக்கு.. நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
கங்கையில் 12 மணி நேரம் மிதந்த சிறுவன்! உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்த பெற்றோர்... நடந்தது என்ன? Manithan
முதல் நாளிலேயே தடுமாறிய ட்ரம்பின் ஹார்முஸ் முற்றுகை... அதிரடியாகக் கடந்த ஈரான் கப்பல்கள் News Lankasri