பொருளாதார நெருக்கடியால் சிறார்களுக்கு ஏற்பட்டுள்ள குறைப்பாடு
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டில் வாழும் பிள்ளைகளுக்கு மத்தியில் போஷாக்கு குறைப்பாடு வேகமாக அதிகரித்து வருவதாக கொழும்பு றிஜ்வே சீமாட்டி சிறுவர் மருத்துவமனையின் விசேட மருத்துவ நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
20 வீதமான குழந்தைகளுக்கு போஷாக்கு குறைப்பாடு
றிஜ்வே மருத்துவமனை மேற்கொண்ட ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. இலங்கையில் 53 சிறார்களில் 11 சிறார்கள் போஷாக்கு இன்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த 11 பிள்ளைகளின் 4 பிள்ளைகள் மிக மோசமான போஷாக்கு இன்மையை எதிர்நோக்கி வருகின்றனர்.
இதனடிப்படையில் இலங்கை வாழும் சிறுவர்களில் 20 வீதமானவர்கள் போஷாக்கு இன்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் மருத்துவர் தீபால் பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.
வறிய குடும்பங்களின் பிள்ளைகள்
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியவசிய உணவு பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன.
போதுமான வருமானம் இன்றி நாட்டில் வறுமை கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களை சேர்ந்த பிள்ளைகளுக்கு போதிய உணவோ போஷாக்கு அடங்கிய உணவுகளோ கிடைப்பதில்லை என சமூகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக வறுமையில் வாழும் குடும்பங்களில் உள்ள பிள்ளைகள் கடும் போஷாக்கு குறைப்பாடுகளை எதிர்நோக்கி வருகின்றனர் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.