உக்ரைன் இரும்பு ஆலையில், தமது குழந்தைகள் மழை நீரையே குடித்தனர்- தாய் ஒருவரின் அனுபவம்!
உக்ரைனின் மரியுபோலில் இரும்பு ஆலைக்குள் தஞ்சமடைந்திருந்தபோது தமது குழந்தைகள் மழை நீரையே குடித்ததாக தாய் ஒருவர் தெரிவித்துள்ளார்.
யூலியாவும் அவரது மூன்று மகள்களும் தாகமாக இருந்ததால் மழை பெய்த பின்னர் அதனை சேகரித்தே சில வாரங்களாக குடித்து வந்துள்ளனர்
தண்ணீர் மற்றும் உணவு மாத்திரமல்ல. கழிப்பறை, குளியலறை அல்லது மின்சாரம் எதுவும் அந்த தங்குமிடத்தில் இருக்கவில்லை.
இந்தநிலையில் ரஷ்யர்கள் இரும்பு ஆலை மீதான தாக்குதல் நிறுத்தப்பட்;டு அவர்கள் வெளியேறிய பின்னர் குறித்த தாயும் மூன்று பிள்ளைகளும் முகாம் ஒன்றில் தங்கியுள்ளனர்
ஒரு நாளைக்கு ஒரு முறை மூன்று குழந்தைகளுக்கும் ஒரு சிறிய கிண்ணத்தில் சூபபை மட்டுமே உணவாக வழங்கமுடிந்தது.
மூன்று குழந்தைகளுக்கும் ஒரு குவளை தண்ணீர் மாத்திரமே கிடைத்தது.
தன்னிடம் பணம் இருந்தது, ஆனால் எதையும் வாங்க முடியவில்லை, எங்கும் எதுவும் இல்லை, அனைத்தும் உடைக்கப்பட்டு அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்டு அழிக்கப்பட்டதாக அவள் கூறியுள்ளார்
கடந்த மார்ச் தொடக்கத்தில் இருந்து சுற்றி வளைக்கப்பட்ட துறைமுக நகரமான மரியுபோல், இப்போது பெரும்பாலும் ரஷ்யப் படைகளின் கட்டுப்பாட்டில் உள்ளது
இருப்பினும் பல நூறு உக்ரைனிய துருப்புக்கள் நகரின் தெற்கில் உள்ள அசோவ்ஸ்டல் என்ற இரும்பு தொழிற்சாலையில் உள்ளனர்.
ரஷ்யப் படைகள் பரந்து விரிந்த தொழில்துறை வளாகத்தை முற்றுகையிட்டு அதன் மீது வான்வழி குண்டுவீச்சைத் தொடர்கின்றன,
ஆனால் தொழிற்சாலைக்கு அடியில் உள்ள சுரங்கப்பாதை வலையமைப்பிலிருந்து உக்ரைனிய துருப்புக்களை வெளியேற்ற இதுவரை எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை.