வீடொன்றில் பெற்றோரால் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட குழந்தைகள் - பொலிஸார் தீவிர விசாரணை
அம்பலாங்கொடை - குலீகொட ரங்கோத் விஹார மாவத்தையில் உள்ள வீடொன்றில் பெற்றோர் தனது இரு குழந்தைகளை கைவிட்டுச்சென்ற சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
2 மற்றும் 3 வயதுடைய இரண்டு குழந்தைகளே இவ்வாறு கைவிடப்பட்டுள்ளனர்.
இது குறித்து அறிந்த அயலவர்கள் நேற்று (11) இரவு அம்பலாங்கொடை பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்திற்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் இரு குழந்தைகளையும் மீட்டு பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றுள்ளனர்.
பொலிஸார் தீவிர விசாரணை
தற்போது பொலிஸாரின் பாதுகாப்பில் உள்ள இரண்டு குழந்தைகளையும் சிறுவர் இல்லத்தில் ஒப்படைப்பதற்கான அனுமதியை நீதிமன்றில் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்து வருவதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த குழந்தைகளின் பெற்றோரைக் கண்டறிய பொதுமக்களின் உதவி கோரப்பட்டுள்ளதாகவும், அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டதும் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 13 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

ஜாய் கிரிசில்டா பேச்சால் பல கோடி நஷ்டம்.. நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த மாதம்பட்டி ரங்கராஜ் Cineulagam

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri
