இலங்கையில் 22 இலட்சம் குழந்தைகள் போஷாக்கு குறைவால் பாதிப்பு
இலங்கையில் வாழும் 22 இலட்சம் வரையான குழந்தைகள் போஷாக்கு தொடர்பான பிரச்சினைகளினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் தற்போதைய நிலவரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் இணை அமைப்பான யுனிசெப் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
கடுமையான போஷாக்கு குறைபாடு
குறித்த அறிக்கையின் பிரகாரம் இலங்கையில் சுமார் 56,000 குழந்தைகள் நேரடியாக கடுமையான போஷாக்கு குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ஐந்து வயதுக்குக் குறைவான பிள்ளைகளில் சுமார் 22 லட்சம் பேரளவிலான குழந்தைகள் போஷாக்கு தொடர்பான பிரச்சினைகளினால் பாதிக்கப்பட்டு மனிதாபிமான உதவி தேவைப்படுவோராக காணப்படுகின்றனர்.
உணவுப் பற்றாக்குறை
இலங்கையில் சுமார் 4.8 மில்லியன் குழந்தைகள் கல்வி விடயங்கள் தொடர்பான தேவைகளைக் கொண்டவர்களாக கருதப்படுகின்றனர்.
மேலும் 6.2 மில்லியன் இலங்கையர் உணவுப் பற்றாக்குறை பிரச்சினைக்கு முகம் கொடுத்துள்ளனர்.
அதிலும் 66000 பேர் கடுமையான உணவுப் பற்றாக்குறையினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 15 மணி நேரம் முன்

பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு... செயல்பாடுகளை நிறுத்தும் பெரும் தொழில்நுட்ப நிறுவனம் News Lankasri

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri
